Advertisement

சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் செம்பு அம்பு

காங்கேயம் : சிவன்மலை கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், செம்பு அம்பு வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இதில் வைத்து பூஜிக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாக அமையும் என்பது, பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

கடந்த ஏப்., 10 முதல், அருகம்புல், கீழாநெல்லி வேர், மிளகு வைத்து பூஜையானது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலை சேர்ந்த கென்னடி, 51, என்பவர் கனவில், செம்பு அம்பு வைக்க உத்தரவானது. நேற்று முதல், இப்பூஜை பொருள் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: பக்தர்களின் கனவில், சிவன்மலை ஆண்டவர் சொல்லும் பொருள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது, வழக்கமாக உள்ளது. இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது செம்பு அம்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தீமை அகன்று, நன்மை பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Deepak -

  may be it indicates the demand for copper

 • நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  ஈடிணை இல்லா எந்தாய் மொழியாம் தமிழை வைத்து பிழைப்பு நடத்தும், தமிழருக்காய் போராடுகிறோம் என்று சொல்லி பண உதவி யாசிக்கும் போலிகளின் முகமூடி, சிவன் மலை செம்பு அம்பால் குத்திக் கிழியட்டும்..

 • Pats - Coimbatore,இந்தியா

  சென்றமுறை (கடந்த ஏப்., 10 முதல்) அருகம்புல், கீழாநெல்லி வேர், மிளகு வைத்து பூஜையானது. அதனால் விளைந்த பயன் என்ன? யாராவது சொல்லுங்கள்.

 • nanthuji,thailand -

  卐..ஆறுதலான செய்தி.. நம்பிக்கையே வாழ்க்கை.. இன்று உறங்கும் மனிதன், நாளை விழிப்பான் என்ற நம்பிக்கையிலேயே உறங்குகிறான்.. சிலரது கருத்துக்கள் மத நம்பிக்கையை இழிவு படுத்துவதாக உள்ளது.. அவர்களைப் பற்றி கவலை கொள்ள தேவை இல்லை, அனைவரும் புனை பெயரில் கருத்து வெளியிடுபவர்கள்.. இறை நம்பிக்கை மற்றும் இறைபயமே வாழ்வைச் செம்மையாக்கும்.. குற்றம் புரிவோர்க்கும் தடுமாற்றமும், கிலியும் உண்டாக்கும்.. எந்த மதமாக இருந்தாலும், மதிப்பிற்குரியதே.. சில அற்பர்களின் செயலைக் கொண்டு தவறாக கணிக்க கூடாது.. இறை வழிபாடு இன்று,நேற்று தோன்றியது இல்லை, மனித குலம் தோன்றிய போதே தொடங்கியது.. ஓவ்வொரு யுகத்திலும், அதர்மிகளுக்கு தண்டனை கிடைத்து கொண்டு தான் உள்ளது.. வெளித் தோற்றத்திற்கு தெரியாமலும், சில தாமதமாகவும் ஏற்படும்.. தம் பெற்றோர் மற்றும் நல்ல பாதுகாவலர்களால் வளர்க்கப்பட்ட எவரும், தம்முடைய அல்லது மற்ற மதத்தை இழிவு படுத்த மாட்டார்கள்..

 • ஆப்பு -

  செம்பு அம்பு (காப்பர் - copper) -ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் தொறந்துருவாங்க போலிருக்கே...

 • Bhaskaran - Chennai,இந்தியா

  முன்பு இந்த மாதிரி வைத்தால் பாதிப்புகளோ அல்லது பஞ்சமோ யுத்தமோ வெள்ளமோ ஏற்பட்டுக்கொண்டிருந்ததாம் இப்போது அது பலிக்கிறதா என்று தெரியவில்லை

 • RV Subbaiah - FAHAHEEL,குவைத்

  திரு மணி அவர்களே தயவு செய்து இந்துக்களின் நம்பிக்கையை கொச்சை படுத்தவேண்டாம்.சிவன் மலை பற்றி தெளிவாக அறிந்து கொண்டு பேசுங்கள்.

 • Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா

  நல்ல வேளை ஸ்டெரிலைட் ஆலய திறக்க ஆண்டவர் உத்தரவிட்டதா சொல்லாம விட்டாங்களே

 • ஸாயிப்ரியா -

  நாட்டில் தீமைகள் அகன்று சுபிட்சம் ஏற்பட வேண்டும் இறைவா.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாக்குவது போதாது என்று இவர்கள் வேறு. ஒருவருடைய கனவில் வந்தது என்று பிறருக்கு எப்படி தெரியும் - அந்த ஆள் புரூடா விடவில்லையென்று?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement