Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இந்தாண்டு போராட்டம் இல்லை என்ற அறிவிப்பு சந்தோஷமாக உள்ளது' என கூறும் வகையில், சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் மாநில பொதுச்செயலர், கண்ணையா பேட்டி: ஏழாவது சம்பள கமிஷனை அமல்படுத்த வேண்டும்; ரயில்வே துறையை தனியார் மயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை, ரயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம். இவற்றை, ஏப்ரலுக்குள் நிறைவேற்றா விட்டால், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவது என, டில்லியில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து பேட்டி: தெற்கே தமிழ், வடக்கே சமஸ்கிருதம் என, இவ்விரு மொழிகளும், இந்தியாவின் இரு கண்கள் என, அறிஞர்கள் கூறுகின்றனர். சமஸ்கிருதத்தை வாழும் மொழி என சொல்ல முடியாது என்றாலும், வாழும் மொழியாகவும், வாசிக்கும் மொழியாகவும் உள்ளது தமிழ். தமிழை கழித்துவிட்டால், இந்தியாவும் கழிந்து போகும் என்பதை, மத்தியில் ஆள்வோர் உணர வேண்டும். தமிழோடு சேர்ந்து தான், இந்தியாவின் ஒருமைப்பாடு, நாகரிகம் உள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிக்கை: நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள கைலாய மானசரோவருக்கு, புனித யாத்திரை சென்ற இந்திய பக்தர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி யுள்ளனர். அப்பகுதியில் ஆக்சிஜன் குறைவாக கிடைப்பதாலும், உணவின்றி அவதியுறுவதாலும், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மீட்பு பணி, நிவாரண பணிகளை துரிதப்படுத்துவதில், தற்சமயம் ஏற்பட்டிருக்கும் சவால்களை, மத்திய அரசு எதிர்கொண்டு, போர்க்கால அடிப்படையில், பக்தர்களை மீட்க வேண்டும்.

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில், ௧,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே, மரபு வழியாக இயங்கி வரும், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மரபு வழி மருத்துவங்களை பாதுகாக்க, அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, சித்த மருத்துவர்கள் உள்ளிட்ட, பாரம்பரிய மருத்துவர்களை, மாநில அளவில் முழுமையாக கணக்கெடுத்து, தேவையான பயிற்சிகள் அளித்து, அவர்களுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற சான்று வழங்க முன் வர வேண்டும்.

பா.ஜ., தேசிய செயலர் முரளிதர ராவ் பேச்சு: திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை பிடித்துவிட்டாலும், தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. தமிழகத்தில், கோவை எங்களுக்கு சாதகமான பகுதி. கோவையில், பா.ஜ., சார்பில் மக்கள் பிரதிநிதி இருந்தால், உங்கள் பிரச்னைகளை டில்லிக்கு எளிதில் கொண்டு வந்து சேர்க்கலாம். கோவை வழியாக தமிழகத்தில், பா.ஜ., கால் பதிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement