Advertisement

டீ கடை பெஞ்ச்

மாதம் ரூ.3 லட்சம், 'அள்ளும்' இன்ஸ்பெக்டர்!''நோட்டீஸ் அனுப்பி, வாய்ப்பூட்டு போட போறாங்க...'' என்றபடியே, பெஞ்சில் சங்கமித்தார் அந்தோணிசாமி.

''யாருக்கு ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.

''தனியார், 'டிவி'க்கள்ல, அரசியல் நிலவரம் பத்தி, தினமும் நாலஞ்சு பேரை அழைச்சு, விவாதம் நடத்துறாங்களே... இதுல, எல்லா கட்சி பிரமுகர்களும் கலந்துக்குறாங்க... ''அ.தி.மு.க., சார்புல சிலர், தலைமையின் அனுமதியில்லாம கலந்துக்கிட்டு, ஏடாகூடமா பேசிடுறாங்க... 'உங்க கருத்தால, கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்ட பெயர்... இனிமே விவாதத்துக்கு போக வேண்டாம்'னு தலைமை அலுவலகத்துல இருந்து சொல்லியிருக்காங்க...

''அதை சட்டை செய்யாம, சிலர் பேசிட்டு இருக்காங்க... அதனால, இவங்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, வாய்ப்பூட்டு போட, தலைமை முடிவு பண்ணியிருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''த.மா.கா.,வை தவிக்க விட்டுட்டு போயிட்டாரு பா...'' என்றார் அன்வர்பாய்.

''யாரு வே அது...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''த.மா.கா.,வுல முக்கிய தலைவரா இருக்குறவர், கோவை தங்கம்... எஸ்.ஆர். பாலசுப்ரமணியமும், இவரும், கோவையில, த.மா.கா.,வை வளர்க்க ரொம்பவே பாடுபட்டாங்க பா... ''ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, எஸ்.ஆர்.பி., தன் ஆதரவாளர்களோட, அ.தி.மு.க.,வுக்கு போயிட்டார்... இன்னும் சிலர், காங்., கட்சிக்கே போயிட்டாங்க பா...

''கோவை தங்கத்துக்கு, த.மா.கா.,வுல மாநில பொருளாளர் பதவி கிடைச்சதால, சென்னையில செட்டிலாகிட்டார்... இதனால, கோவையில, த.மா.கா., கூடாரம் காலியாயிட்டு இருக்கு... கட்சி ஆபீசும், தொண்டர்கள் நடமாட்டம் இல்லாம பூட்டியே கிடக்குது பா...'' என்றார் அன்வர்பாய்.

''மாசம், மூணு லட்சம் ரூபாய் சம்பாதிக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.

''ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கே அவ்வளவு சம்பளம் இருக்காதே பா...'' என்றார் அன்வர்பாய்.

''நான் சொல்றது கிம்பளத்தை... சென்னையில, போக்கு வரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருத்தர், வசூல் வேட்டையில மன்னனா இருக்காரு... சக போலீசாரை மிரட்டி, ரோந்துக்கு கூட்டிட்டு போய், அடாவடியா வசூல் பண்ணுதாரு வே... ''நடைபாதை வியாபாரிகள், ஓட்டல்கள்ல எல்லாம், 'கட்டிங்'கை கேட்டு வாங்குதாரு... தினமும், 10 ஆயிரம் ரூபாய் இல்லாம, வீட்டுக்கு போவ மாட்டாராம்... மாசம், மூணு லட்சம் ரூபாய் அள்ளிடுதாரு வே...

''இவர், இதுக்கு முன்னாடி வேலை பார்த்த இடத்துல, இவர் மீதான கோவத்துல, சக போலீசாரே, எட்டு, 'வாக்கி டாக்கி'களை துாக்கி வீசிட்டாவ... ஒரு வாக்கி டாக்கி காணாம போனாலே, 'சஸ்பெண்ட்' பண்ணிடுவாவ வே... ''ஆனா, அப்ப ஒரு அரசியல் புள்ளியை பிடிச்சு, தண்டனையில இருந்து தப்பிச்சிட்டாரு...'' என்ற அண்ணாச்சி, தெருவை பார்த்து, ''மணிவண்ணன் நில்லும்... உம்மட்ட ஒரு சங்கதி பேசணும் வே...'' என, நடக்க, மற்றவர்களும் இடத்தை காலி செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • s.rajagopalan - chennai ,இந்தியா

    வாரிசு அரசியலில் உள்ள பெரும் கேடு தா ம க வில் வெளிப்படுகிறது. மூப்பனார் ஒரு முழுநேர அரசியல்வாதி. ஜி கே வாசன் அரசியலில் திணிக்கப்பட்டவர்...வாரிசு என்ற ஒரே தகுதியுடன். அவர் கொஞ்சம் சுதாரித்திருந்தால் தமிழகத்தில் இன்றைய சூழலில் ஒரு முக்கியமான தலைவராக உயர்ந்திருக்கலாம். ஆனால் இதை ஒரு லெட்டர் பட கட்சியாக வளர்த்துவிட்டாரே ?

  • A R J U N - ,இந்தியா

    ...............''ஆனா, அப்ப ஒரு அரசியல் புள்ளியை பிடிச்சு, தண்டனையில இருந்து தப்பிச்சிட்டாரு...''மணிவண்ணனுக்கு என்ன-ஆணையரையே தெரியும்னு..சொன்னவராயிற்றே...ஆனால் ஆணையருக்கு தான் இவரை தெரியாது..இன்னும் எத்தனைநாள்....அதான் அம்பலம் ஆயிற்றே..அதோகதிதான்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement