Advertisement

டீ கடை பெஞ்ச்

தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட்?''பேரம் பேசி, லாரிகளை விடுவிச்சுட்டார் ஓய்...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.

''சமீபத்துல, திருச்சியில இருந்து, மணல் கடத்தி வந்த ஆறு லாரிகளை, மதுரை, வாடிப்பட்டி போலீசார் பறிமுதல் செஞ்சு, ஸ்டேஷன்ல நிறுத்தினா ஓய்... ''மணல் கடத்தல் கும்பல், ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., ஒருத்தரை பிடிச்சிடுத்து... எம்.எல்.ஏ., ரெண்டு லாரி மணலை தனக்கும், மீத நாலு லாரிகளை மதுரைக்கும் கொண்டு போகலாம்னு பேரம் பேசி முடிச்சிருக்கார்...

''அப்புறமா, பேலீசாருக்கு அழுத்தம் குடுத்து, ஆறு லாரிகளையும் வம்பு, வழக்கு இல்லாம விடுவிச்சிட்டார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''மாணிக்கம், இப்படி வந்து உட்காருங்க...'' என நண்பரை வரவேற்ற அந்தோணி சாமி, ''போராட துாண்டுனாங்களான்னு விசாரணை நடக்குதுங்க...'' என்றார்.

''எங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.

''வேலுார் மாவட்டம், சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில, ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமா இருந்துச்சு... இதனால, பணி நிரவல்ல, சமீபத்துல, மூணு ஆசிரியர்களை இடமாற்றம் செஞ்சாங்க... இதுல, 22 வருஷங்களா இருந்த தமிழாசிரியை விஜயாவும் உண்டு...

''இவங்க இடமாறுதலை ரத்து செய்யணும்னு, மாணவர்களும், பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க... ''இதுக்கு முன்னாடி, திருவள்ளூர் மாவட்டத்துல, பகவான்னு ஒரு ஆசிரியரோட இடமாற்றத்தை ஏத்துக்காம, மாணவர்கள், அவரை கட்டிப் புடிச்சு அழுதாங்கல்ல... உடனே, அந்த ஆசிரியரை, அதே பள்ளியில பணியாற்ற அனுமதிச்சுட்டாங்க...

''இதை மாதிரி தனக்கும் நடக்கும்னு நினைச்சு, மாணவர்களையும், பெற்றோரையும், ஆசிரியை தரப்பு போராட்டத்துக்கு துாண்டி விட்டதா புகார் எழுந்திருக்கு... இது சம்பந்தமா, விசாரணை நடந்துட்டு இருக்குங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''ஒற்றை இலக்கத்துல இருந்து, இரட்டை இலக்கத்துக்கு முன்னேறி இருக்காவ வே...'' என, கடைசி விஷயத்திற்கு வந்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''வர்ற லோக்சபா தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில, காங்கிரசுக்கு, ஒற்றை இலக்கத்துல தொகுதிகளை ஒதுக்க, ஸ்டாலின் முடிவு பண்ணியிருந்தாராம்... ''சமீபத்துல, காங்., தலைவர் ராகுலை, வி.சி., தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மையம் கமல் எல்லாம் பார்த்து, பேசிட்டு வந்தாங்கல்லா...

''இதை பார்த்துட்டு, தி.மு.க., தரப்பு, மனம் மாறியிருக்காம்... அதாவது, தமிழகம், புதுச்சேரி சேர்ந்து, மொத்தம் இருக்குற, 40 தொகுதிகள்ல, 20ல தி.மு.க., நிற்க போகுதாம்... ''மீதம், 20 தொகுதி களை, காங்கிரஸ் கையில குடுத்து, 'இதர கூட்டணி கட்சிகளோட சேர்ந்து, பிரிச்சுக்குங்க'ன்னு சொல்லி இருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.

அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Vasanth Kumar - Chennai,இந்தியா

    தளபதி அவர்களே நாம் தனித்து நின்றால் நாளை நமதே நாற்பதும் நமதே தயவுசெய்து காங்கிரெஸ்சை கழட்டி விடுங்க

  • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

    தி மு க இருபது, மற்றவர்களுக்கு இருபது, அப்போ நாற்பதும் இங்கிருந்து இல்லையா? தி மு க தேறும், காங்கிரஸ் கால் வாரி விட படும்.

  • Gajageswari - mumbai,இந்தியா

    சரியான முடிவு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement