Advertisement

காட்டு மாடு வேட்டை வழக்கு மேலும் ஒருவர் கைது

வருஷநாடு மேகமலை வன பகுதிக்கு உட்பட்ட வலம்பூரி மலைப்பகுதியில் காட்டு மாடுகள் வேட்டையாடிய கோம்பைத்தொழு கணேசன், 34, ராஜகோபால் ஆகியோரை, கடந்த மூன்று தினங்களுக்கு முன் வனத்துறையினர் கைது செய்தனர்.அவ்வழக்கில் நேற்று அரண்மனைப்புதுார் ஜீவா, 32, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் 9க்கும் மேற்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டு, இறைச்சியை வருஷநாடு, சிங்கராஜபுரம் உள்ளிட்ட பகுதியில் விற்பனை செய்துள்ளதாகவும் ஒப்புக்கொண்டார். இதில் தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை வனவர் சோனைமுத்து தலைமையில் தனிப்படையினர் தேடுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement