Advertisement

'டவுட்' தனபாலு

காங்., -எம்.எல்.ஏ., வசந்த குமார்: நாங்கள், மக்கள் பிரதிநிதிகள். தொகுதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேச வேண்டும். சட்டசபையில் இருந்து, தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்ததும், நாங்களும், அவர்களின் பின்னால் செல்ல முடியாது.

டவுட் தனபாலு: சட்டசபையில் பேசினால், மக்களின் பிரச்னைகள் தீரும்னு நம்புறீங்க... எட்டு தொகுதி மக்களுக்காக, நீங்க இவ்வளவு அக்கறையாக பேசுறீங்க... ஆனா, 88 தொகுதிகளை தன்வசம் வைத்துள்ள, உங்க கூட்டணிக் கட்சியான, தி.மு.க.,வோ, மக்கள் பணியாற்ற விரும்பாமல் இருக்கே... இப்படி நடந்து கொண்டால், தேர்தல் நேரத்தில், எப்படி மக்களைச் சந்திப்பது என்ற, 'டவுட்'டை எழுப்பிப் பார்த்தீங்களா...!-----------------------

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார்: வன்முறையாளர்களை, இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்பதில், மாற்று கருத்து இல்லை. பயங்கரவாதம் தலைதுாக்க அனுமதிக்க மாட்டோம்; ஜெ., வழியில் ஒடுக்குவோம்.

டவுட் தனபாலு: 'தமிழகத்தில், சட்டம் - -ஒழுங்கு சரியில்லை... பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமாக, தமிழகம் இருக்கு'ன்னு, பொன்.ராதா கிருஷ்ணன் உட்பட, பா.ஜ., பிரமுகர்கள் சொல்லிய போதெல்லாம், அதை மறுத்துப் பேசி வந்தீங்க... ரஜினி, ஒரு வார்த்தை சொன்னதும், உடனடியாக, நம்பிக்கையான பதிலைத் தர்றீங்களே... இது என்ன கணக்கு என்ற, 'டவுட்' வருதே...!-------

காங்., கொறடா விஜயதாரணி: கூட்டணி கட்சி என்ற முறையில், தி.மு.க., நடத்திய, மாதிரி சட்டசபை கூட்டத்தில், ஒரு நாள் பங்கேற்றோம். அதன்பின், மக்கள் கடமையாற்ற, சட்டசபைக்கு வந்து விட்டோம்.

டவுட் தனபாலு: 'எதிர்க்கட்சியான, தி.மு.க.,வின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும், ஆரோக்கியமானதாக இல்லை... அனைத்து விஷயத்திலும், அரசியல் ஆதாயம் தேட பார்க்குது'ன்னு, பலரும் குற்றஞ்சாட்டி பேசி வர்றாங்க... நீங்க, அதை செயலில் சொல்லிக் காட்டிட்டீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement