Advertisement

காஞ்சி பெரியவர் பிறந்த நாளில் கிடைத்த' மகா பெரியவா'

காஞ்சி பெரியவர் பிறந்த நாளில் கிடைத்த 'மகா பெரியவா' 'மகா பெரியவா' என்று மந்திரம் போல பலரும் உச்சரிக்கும் காஞ்சி பெரியவரின் பிறந்த தினம் இன்று(29/5/18)

பகல் வேளையில் பாம்பே கண்ணன் போனில் பேசினார், சென்னை வேளாச்சேரியில் இருப்பவர் பொன்னியின் செல்வன் அண்ட் பிரண்ட்ஸ் என்ற பேனரில்,தமிழ் மீதான ஈர்ப்பின் காரணமாக பல்வேறு சரித்திர ஆன்மீக காப்பியங்களை ஒலிப்புத்தகமாக்கியவர், பொன்னியின் செல்வனை டெலிபிலிமாக்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர்.

படிக்க நேரமில்லாதவர்களுக்கு இந்த ஒலிப்புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.பாத்திரங்கள் உயிர்பெற்று பேசுவதால் படிக்கத் தெரிந்தவர்கள் கூட இப்போது இவரது இந்த ஒலிப்புத்தகத்தை வாங்கி கேட்கின்றனர்.

இப்போது இந்த ஒலிப்புத்தகம் ஒரு படி மேலே போய் பார்வை இல்லாதவர்களிடம் போய்ச்சேர்ந்து உள்ளது, அவர்கள் பலமுறை இதனைக்கேட்டு மகிழ்கின்றனர்

இந்த புத்தகங்களுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நான் கிருஷ்ண தேவராயன் மற்றும் ரமணசரிதம் என்ற ஒலிப்புத்தகங்களும் வந்து பலரையும் மகிழ்வி்த்து வருகிறது.

இந்த ஒலிப்புத்தக வரிசையில் தற்போது வந்துள்ளதுதான் மகா பெரியவா.

பெரியவர் வாழ்க்கையில் நடந்த மனதைத்தொட்ட நுாற்றுக்கும் மேலான சம்பவங்களை பி.சுவாமிநாதன் தொகுத்து எழுதியுள்ளார் அந்த தொகுப்பில் உள்ளதை சி.கே.வெங்கட்ராமனுடன் இணைந்து பாம்பே கண்ணன் ஒலிப்புத்தகமாக்கி உள்ளார்.

இந்த ஒலிப்புத்தகத்தை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் கேட்டுப்பாருங்கள் என்று சொன்னதுடன் ஆனந்த வடிவேல் என்ற அன்பர் மூலமாக அனுப்பியும் வைத்தார்.

ஒலிப்புத்தகத்தில் பெரியவர் பேசுகிறார் சிரிக்கிறார் உரையாடுகிறார் பக்தர்களின் கேள்விகளுக்கு சாந்தமாக பாந்தமாக விளக்கம் தருகிறார்.

பல்வேறு தலைப்புகள் அதில் 'சங்கரனாவது..கிங்கரனாவது' என்பது ஒரு தலைப்பு

கும்பகோணத்தை சேர்ந்த சதாசிவம் என்ற பக்தர் அனுஷத்தின் போது பெரியவரை பார்ப்பதை வழக்கமாக கொண்டவர். ஒரு அனுஷத்தின் போது அரசியல் போராட்டம் காரணமாக பஸ்கள் ஒடவில்லை சதாசிவம் காஞ்சி போகமுடியவில்லையே என மனமொடிந்து வாசலில் உட்கார்ந்திருக்கிறார் அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் வீட்டு வாசலில் நிற்கிறது நாங்க காஞ்சிபுரம் போறோம் வழியில் கடை எதுவும் இல்லை காபி குடிக்கணும்ணு தோணித்து உங்க வீட்ல கிடைக்குமா? என்கிறார் கார் ஒட்டிவந்த பெரியவர்.

காபி குடித்துவிட்டு நீங்களும் காஞ்சி வாரீங்களா என்று கேட்கிறார் இதற்காகத்தானே சதாசிவம் காத்திருந்தார் அவரும் அவரது துணைவியாரும் காாில் பயணித்து பெரியவர் தரிசனம் பெறுகின்றனர், அப்போது கார் பயணம் சொகமா இருந்ததா?என்று பெரியவர் கேட்கிறார்

பிற்பாடு இந்த கார் பயணத்தை ஏற்பாடு செய்தவரே பெரியவர்தான் என்பதை தெரிந்து கொண்டு ஆனந்த கண்ணீர் விடுகிறார் சதாசிவம் இப்படி நுாற்றுக்கணக்கான சம்பவங்கள் உரையாடலாக தொடர்கின்றது.உணர்வுபூர்வமான உச்சரிப்பு காரணமாக பாத்திரங்கள் மனிதிற்குள் உயிர்பெற்று உலாவருகின்றன.

மொத்தம் 25 மணி நேரம் ஒடக்கூடிய அளவில் தயாரிக்கப்பட்ட இந்த ஒலிப்புத்தகத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.கேட்கும் போது புத்தகம் படித்ததும் போலவும் இருக்கிறது, ரேடியோவில் நாடகம் கேட்பது போலவும் இருக்கிறது ஆகவே பயண நேரத்திலும் இரவு நேரத்திலும் ஒய்வு நேரத்திலும் கண்ணை மூடிக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

மகா பெரியவா என்ற இந்த ஒலிப்புத்தகமோ(சி.டி) அல்லது பொன்னியின் செல்வன் அண்ட் பிரண்ட்ஸ் வௌியிட்டுள்ள மற்ற ஒலிப்புத்தகங்களோ தேவைப்படுபவர்கள் பாம்பே கண்ணனை தொடர்பு கொள்ளவும் எண்:9841153973.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement