Advertisement

பக்க வாத்தியம்

'கலெக்டருக்கு கோடி புண்ணியம்!'

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம், மதுரையில் நடந்தது. வி.ஐ.பி.,க்கள் மட்டும், ஏ.வி., மேம்பாலத்தில் இருந்து, அழகரை தரிசிக்க போலீசார் அனுமதித்தனர். 'எங்களையும் அனுமதிக்க வேண்டும்' என, மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர், கலெக்டர் வீரராகவ ராவிடம் முறையிட்டனர்.அவர்களை, மூன்று சக்கர வாகனங்களுடன், பாலத்திற்கு செல்ல அனுமதிக்கும்படி போலீசாருக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார். பாலத்தில் இருந்து அழகர் ஆற்றில் இறங்குவதை கண்டு, அவர்கள் பக்தி பரவசம் அடைந்தனர். இதற்காக, கலெக்டருக்கு நன்றி தெரிவித்து, கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில், மாற்றுத்திறனாளிகள், போஸ்டர் ஒட்டி இருந்தனர்.அதை பார்த்த, கலெக்டர், 'டென்ஷன்' ஆனார். மாற்றுத்திறனாளிகள் அமைப்பினரை அழைத்து, 'வாழ்த்து போஸ்டரை உடனே அகற்றுங்கள்' என, அன்பு கட்டளையிட்டார்.இதை கவனித்த மூத்த நிருபர் ஒருவர், 'இதே போல், அரசியல் கட்சி உள்ளிட்ட எல்லா போஸ்டர்களையும் அகற்றினால், கலெக்டருக்கு கோடி புண்ணியம்' எனக் கூற, மனு கொடுக்க வந்தோர், அதை ஆமோதித்து தலையசைத்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஐயோ பாவம், மாற்றுத்திறனாளிகளும் சுவாமி தரிசனம் செய்யட்டுமே என்று உதவப்போய் அடி மடியிலேயே கை வைத்தால்.....? உள்ளூர் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் இவரை பிடித்த காட்டில் கொண்டு விட்டுவிட மாட்டார்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement