Advertisement

எனக்குள் ஒரு கலெக்டர்...


அந்த சின்ன அரங்கம் மகிழ்ச்சியில் நிறைந்து காணப்பட்டது.

காரணம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய இறுதிக்கட்ட தேர்வில் இந்திய அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரான லி.மதுபாலனை பாராட்ட சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் அதன் நிறுவனர் வேடியப்பன் தலைமையில் கூடியிருந்த கூட்டம் அது.

23 வயதில் ஒருவர் கலெக்டராவது என்பது அசாதாரணமான விஷயம் ஆனால் முடிந்தால் யாரும் இதை சாதாரணமாக்கலாம் என்பதன் அடையாளமாகவே அன்று மதுபாலன் பேச்சு அமைந்திருந்தது.

அவர் பேசியதன் சுருக்கமாவது...

நான் ராஜபாளையத்தில் பிறந்தவன் அம்மா மலர்விழி அப்பா லிங்கம் தம்பி குணபாலன் என்று சாரசரி மத்திய தர குடும்பம்தான் என்னுடையது.

பள்ளிப்படிப்பு முடிந்து சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லுாரியில் படித்தேன் அப்போதுதான் ரயில்வே உயரதிகாரியாக இருக்கும் மாமா இளங்கோவன் அவரது மனைவி கீதா இளங்கோவன் ஆகியோரின் அன்பும் வழிகாட்டுதலும் கிடைத்தது.

எதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதற்கு முன்பாக எதைச் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன் டாக்டருக்கு படிப்பதில்லை என்பது அதில் ஒரு முடிவு.

நான்கு வருட பொறியியல் படிப்பு படிக்கும் போதே பலருடைய வழிகாட்டுதல் காரணமாக ஐஏஎஸ்க்கு படிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது அந்த எண்ணம் நாள்பட நாள்பட வலுப்பெற்றது.நீ என்ன நினைக்கிறாயோ அதைச் செய் என்று பெற்றோரும் உற்றோரும் ஊற்சாகம்தந்தனர்.

பொறியியல் படிப்பு முடித்ததுமே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது, வேலையில் சேர்ந்துவிட்டால் சராசரி ஆளாகிவிடுவோம் என்ற எண்ணம் வந்ததால் வேலையில் சேரவில்லை.

பிறகு ஐஏஎஸ் தேர்வுக்கான தேடலை துவங்கினேன் நிரந்தரமாக பயிற்சி நிலையம் என்று போகாமல் பல இடங்களில் சென்று படித்தேன் டில்லியில் படித்தேன் அண்ணா பல்கலையில் வாரக்கடைசி நாள் வகுப்புகளில் படித்தேன் தமிழ் இலக்கியத்தை முக்கிய பாடமாக்கிக் கொண்டேன்.

சங்கர சரவணன்,பூ.கொ.சரவணன்,குமரேஷ்வரி ஆகியோர் என்னை மிக அழகாக செதுக்கினார்கள் பாடத்தை பொழுது போக்காக படிக்கவைத்தனர்.

வருடத்திற்கு ஆயிரம் பேருக்குதான் வேலை ஆனால் பத்து லட்சம் பேர் எழுதுகின்றனர் என்ற எண்ணமே சோர்வை கொடுத்துவிடும் இதில் 8 லட்சம் பேர் சும்மா எழுதிவைப்போமே என்றுதான் எழுதுகின்றனர்.

இன்றைய தேதிக்கு இந்த தேர்வு மிக முறைப்படி மிக நேர்மையாக மிக உண்மையாக நடைபெறுகிறது.மத்திய அரசு ஊழியராக எந்த சாதி சமய சார்புகளில்லாமல் இவன் வேலை பார்ப்பான் என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் உறுதி செய்து கொள்வர்.

உதாரணத்திற்கு நேர்முக தேர்வின் போது நீ்ங்கள் தமிழகத்தில் வருகிறீர்கள் நல்லது உங்களுக்கு தெரிந்த புனித தலங்களின் பெயர்கள் சொல்லுங்கள் என்றவுன் மதுரை மீனாட்சி கோவில்,திருச்சி சமயபுரம் கோவில்,சென்னை கபாலீஸ்வரர் கோவில் என்று ஏழு கோவில்களின் பெயரைச் சொல்லியிருப்பவரை விட இந்து இஸ்லாமிய கிறித்தவ புனிததலங்கள் என்று மூன்று புனித தலங்களின் பெயர்களைச் சொன்னவருக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும் காரணம் இவர் எல்லோருக்கும் பொதுவாது இருக்கிறாரா? என்றே பார்ப்பர்.

அதே போல ஜல்லிக்கட்டு நல்லதா கெட்டதா என்று கேட்டால் அது நல்லது நான் தமிழன் அது என் ரத்தத்தில் ஊறிய விஷயம் என்றெல்லாம் அங்கே பொங்கிவிடக்கூடாது எந்த ஒரு விஷயத்தையும் எமோஷனலாக அணுகாமல் அறிவுபூர்வமாக அணுகவேண்டும் அதற்கேற்ற பதில்தான் தரவேண்டும், தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்வது இன்னும் நேர்மை.

அவர்களுக்கு தேவை திறமையான இளமையான நேர்மையான அதிகாரியே தேர்வானவர்களின் பட்டியலைப் பார்த்தால் பெரும்பாலும் 24 வயதிற்குள்ளாகவே இருப்பர்.இதற்கு காரணம் நாட்டின் மீது அக்கறையுடன் எந்தவித எதிர்பார்ப்பு பராபட்சமின்றி சுறுசுறுப்புடன் செயல்படுவர் என்பதால்.

ஆகவே ஐஏஎஸ் என்பது எளிதானதுதான் ஆனால் முதலில் உங்களுக்கு நம்பிக்கை வேண்டும் பிறகு அதில் ஆழமான கடினமான உழைப்பும் தேடலும் வேண்டும்

சுகாதாரம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்தி்ல் எனது கவனத்தை அதிகம் செலுத்துவேன் எதிர்காலத்தில் என் வீட்டிற்கும் நாட்டிற்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பேன் என்றார்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • PR Makudeswaran - Madras,இந்தியா

    எமோஷனலுக்கு நம்மை உட்படுத்தி அடிமையாக்கி ஒரு கூட்டம் காசு பார்த்துவிட்டது. மு க குடும்பம் தான்

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    எந்த ஒரு விஷயத்தையும் எமோஷனலாக அணுகாமல் அறிவுபூர்வமாக அணுகவேண்டும் உண்மை கலெக்டர் சார், இன்றைய நிலையில் தமிழகத்தில் அது பலருக்கு இல்லை என்று ஒரு அடக்குமுறைவாதிகளான பாலைவன வந்தேறிகள் செய்துகொண்டுள்ளனர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement