Advertisement

புலிகள் காப்பகம் அருகே குவாரி: தடை கோரி வழக்கு

மதுரை, களக்காடு புலிகள் காப்பகம் அருகே கல்குவாரிக்கு தடை கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி சுடலைக் கண்ணு தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகே கல்குவாரி நடத்த, கலெக்டர் ஏல அறிவிப்பு வெளியிட்டார். வன உயிரின சரணாலயத்திலிருந்து 10 கி.மீ., துாரத்திற்குள்குவாரிநடத்த அனுமதிக்கக்கூடாது என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதைமீறி, விதிகளை பின்பற்றாமல் கலெக்டர் அறிவிப்பு செய்துள்ளார். வன உயிரினங்கள், அருகிலுள்ளகிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். வரும் காலங்களில்களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திலிருந்து 10 கி.மீ.,துாரத்திற்குள் குவாரிகள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனதமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சுடலைக் கண்ணு மனு செய்தார்.தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.ராஜமாணிக்கம் அமர்வு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர்,திருநெல்வேலி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி, மார்ச் 26க்கு ஒத்திவைத்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement