Advertisement

மாராத்தான் சுப்பிரமணியனாகிய மா.சுப்பிரமணியன்

மாராத்தான் சுப்பிரமணியனாகிய மா.சுப்பிரமணியன்

மா.சுப்பிரமணியன்
முன்னாள் சென்னை மேயர்,இந்நாள் சைதை தொகுதி எம்எல்ஏ

அதிகம் விமர்சனத்திற்கு ஆளாகத திமுககாரர், இயற்கை ஆர்வலர், மரங்களாபிமனி.
அரசியலைத்தாண்டி அதிகம் பேரால் நேசிக்கப்படுபவர் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்யவேண்டும் என்ற துடிப்பு கொண்டவர். சமீபத்தில்தான் இவர் தன் 75 வது மாராத்தான் ஒட்டப்பந்தயத்தை முடித்தார்.

கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டயபாடீஸ் பேஷண்டாக இருந்துவரும் இவர் இதற்காக அதிகாலை எழுந்து வேகமாக நடக்கும் பழக்கம் உள்ளவர்.கூடுதலாக யோகtப் பயிற்சியிலும் ஆர்வம் கொண்டவர்.
ஒரு விபத்தில் சிக்கி கால் மூட்டு எலும்பு நொறுங்கிய நிலையில் அதிசயமாக உயிர் பிழைத்தார் பிழைக்கவைத்த டாக்டர்கள் இனி வேகமாக நடப்பதோ சம்மணமிட்டு உட்காருவதோ கூடாது என்று கூறிவிட்டனர்.

சம்மணமிட்டு உட்காராமல் எப்படி யோகா பயிற்சியில் ஈடுபடமுடியும், எப்படி வேகமாக நடக்காமல் இருப்பது என்றெல்லாம் கவலைப்பட்டவர் வருவது வரட்டும் என்று தன்னம்பிக்கையுடன் முன்னிலும் முனைப்பாக யோகாவிலும் வேகமான நடைப்பயிற்சியிலும் ஈடுபட்டார்.
நடக்கும் வேகத்தை கூட்டினால் மாராத்தான் ஒட்டம் அவ்வளவுதானே? ஒடினால் போயிற்று என்ற மனவலிமையுடன் கடந்த 2014ல்தான் முதல் மாராத்தான் ஒட்டத்தில் கலந்து கொண்டார்.

பல வருடமாக மாராத்தானில் பங்கேற்றவர்களே மூன்று மணிநேரம் ஒடிமுடித்த போது இவர் இரண்டரை மணிநேரத்தில் ஒடிமுடித்தார், நிறைய பேர் பராட்டவே அதன் பிறகு இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் நடந்த மாராத்தான் ஒட்டத்தில் கலந்து கொண்டார்.இதுவரை 75 வது மாராத்தான் ஒட்டத்தை முடித்துள்ளார்.
இவரது மாராத்தான் ஒட்ட பந்தய சாதனை காரணமாக இந்தியா புக் ஆப் ரிக்கார்ட்ஸ்,ஏசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார்.வேல்டு ரிக்கார்ட்ஸ் யூனிவர்சிட்டி இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது.

..''எனக்கு இப்போது 58 வயதாகிறது 75 மாராத்தானை முடித்துவிட்டேன் 60 வயதிற்குள் 100 மாராத்தானை முடித்துவிடுவேன்.பொதுவாக மாராத்தான் ஒட்டம் என்பது பந்தயம் அல்ல பல நல்ல விஷயங்களை முன்வைத்து அதற்கான விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தவே நடத்தப்படுகிறது, ஆகவேதான் மாராத்தானில் நான் விருப்பமுடன் கலந்து கொள்கிறேன்.
மேலும் இளைஞர்களிடையே உடல் ஆரோக்கியத்தை பேணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவே ஒடுகிறேன்.என்னை வேகமாக நடக்கக்கூடாது சம்மணமிட்டு உட்காரக்கூடாது என்று சொன்ன டாக்டர்கள் இப்போது என்னை உதாரணம் காட்டியே நோயாளிகளை உற்சாகப்படுத்துகின்றனர்.

மாராத்தான் ஒட்டம் இருக்கும் நாள் தவிர மற்ற நாட்களில் நான் அதிகாலை எழுந்து நடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் டயாபடீஸ் காரணமாக ஏற்படும் சோர்வு உள்ளீட்ட எந்த பிரச்னையும் எனக்கு கிடையாது முப்பது வயது இளைஞனாக நான் என்னை உணர்கிறேன்
நான் ஒடும் ஒவ்வொரு மாராத்தான் ஒட்டத்திலும் என்னை குறைந்தது இருபது புதிய இளைஞர்களாவது சந்தித்து, உங்களைப் பார்த்துதான் நானும் ஒடவந்திருக்கிறேன் என்பர் இந்த ஒன்றுக்காகவாவது ஒடிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது'' என்று சொல்லி முடித்தார் மாராத்தான் சுப்பிரமணியனாகிவிட்ட மா.சுப்பிரமணியன்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement