Advertisement

பக்க வாத்தியம்

'இப்படி உளறிட்டாரே!'
கன்னியாகுமரி- - மதுரை இடையே, மின்மயமாக்கப்பட்ட, இரட்டை ரயில் பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா, நாகர்கோவில் ரயில் நிலையத்தில், கடந்த, 23ம் தேதி நடந்தது.

இதில், மத்திய ரயில்வே இணை அமைச்சர், மனோஜ் சின்ஹா உட்பட, பலர் கலந்து கொண்டனர்.அ.தி.மு.க., - எம்.பி., விஜயகுமார் பேசும்போது, ஆங்கிலத்தில், 'கழிப்பிடங்கள் இல்லாத நாடாக இந்தியா மாற வேண்டும் என்பது, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கனவு; ஆனால், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதிய கழிப்பிடங்கள் இல்லை' என்றார்.

அதிர்ச்சியடைந்த, பா.ஜ., தொண்டர்கள், 'தனக்குத் தெரியாத மொழியில பேசறதா இருந்தா, எழுதி வைச்சாவது படிக்கணும்... திறந்த வெளிக் கழிப்பிடங்கள்ன்னு சொல்றதுக்கு பதிலா, இப்படி உளர்றாரே...' என, தலையில் அடித்துக் கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement