Advertisement

பக்க வாத்தியம்

என்னடா போங்கு ஆட்டமா இருக்கு…!
சென்னையை அடுத்த, எண்ணுாரில், கடலோர காவல்படை தொடங்கியதன், 42ம் ஆண்டை கொண்டாடும் விதமாக, வாலிபால் போட்டிகள் நடந்தன. மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

வீரர்களை உற்சாகமுட்டும் வகையில், வாலிபால் விளையாடினார். பந்து, அதிக முறை கோட்டிற்கு வெளியே தான் விழுந்தது. இதனால், கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. அதிகாரிகள் அமைச்சரிடம், 'பந்தை போடுங்கள், மற்றவர்கள் விலகுங்கள்' என, சொல்லியபடி இருந்தனர். விளையாட்டு வீரர்கள், மென்மை போக்கை கடைபிடித்தனர்.

இதை பார்த்த, சிறுவன் ஒருவன், 'மினிஸ்டர் மட்டுமே விளையாடுறாரு... இது என்னடா போங்கு ஆட்டமா இருக்கு...' என, அப்பாவியாய், 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    மினிஸ்டர்கள் ஆட்சியையே போங்காட்டமாக ஆடுபவர்கள் குழந்தே இப்படி வெள்ளந்தியா இருக்கியே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement