Advertisement

பக்க வாத்தியம்

'எங்கடா ஓடுற... ஏறுடா பஸ்சுல!'
பஸ் கட்டண உயர்வை கண்டித்து, தி.மு.க.,வினர், சென்னை, ஆவடியில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்த போலீசார், பஸ்களில் ஏற்றினர். அப்போது, இளைஞர் அணியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கைது நடவடிக்கையில் இருந்து, தப்பிக்க எண்ணி, நைசாக நழுவி ஓடினார்.

அதை கண்ட, தி.மு.க., மாவட்ட செயலர் நாசர், வாலிபரை விரட்டிப் பிடித்து நையப் புடைத்து, 'எங்கடா ஓடுற... ஏறுடா பஸ்சுல...' என்றார். அவரும் வேறு வழியின்றி, பஸ்சுக்குள் சென்றார். மூத்த நிர்வாகி ஒருவர், 'வந்தமா, போனமான்னு எப்படி நழுவுறான் பாரு... இவன் தான்யா, உண்மை தொண்டன்' என, நக்கலாகக் கூற, மற்ற தொண்டர்கள் சிரித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement