Advertisement

அறிவியல் ஆயிரம்

எலிகளை அழிக்க நரிகள்



நெல் அறுவடை சீசன் என்றாலே, அது எலிகளுக்கு கொண்டாட்ட சீசனாகும். பாம்பைக் கண்டவுடன், உடனடியாக அடிக்க வேண்டும் என்று மக்கள் நினைப்பதால், வயல்வெளிகளில் எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. விவசாயத்தில் எலிகளின் தொல்லை உலகளாவிய பிரச்னையாக உள்ளது. சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில், எலிகளை ஒழிக்க நரிகளை பரிந்துரை செய்தனர். ஒரு நரி, ஒரு நாளைக்கு சராசரியாக 20 எலிகளை வேட்டையாடியது. எலித் தொல்லை, கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. நரிகளைப் போல கோழி, ஓநாய், கழுகு போன்றவற்றையும் எலி வேட்டைக்கு சீன விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.


தகவல் சுரங்கம்

அறுவடை செய்யும் பழமொழிகள்



தமிழகத்தில் கதிர் அறுப்புக்கு தற்போது இயந்திரங்கள் மட்டுமே பயன்படுகின்றன. கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அக்காலத்தில் கதிர் அறுக்க அதிக ஆட்கள் தேவைப்படுவர். எனவே ஓர் இடத்தில் அதிக ஆட்கள் இருக்கின்றனர் என்பதைக் குறிக்க 'கதிர் அறுப்பு ஆட்கள்' என்பர்.அறுவடைக்காலம் அனைவருக்குமே செழிப்பு என்பதை 'அறுப்புக் காலத்தில் எலிக்கு 5 பெண்சாதி' என்ற பழமொழி காட்டுகிறது. செயல்பட முடியாதவர் முன்பு வாய்ப்புகள் அதிகம் இருப்பதைக் குறிக்க 'அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே 56 அரிவாள்' என்ற பழமொழி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement