Advertisement

தெருநாய்கள் மீதான லெஸ்லியின் நா(தா)ய்ப்பாசம்...


தெருநாய்கள் மீதான லெஸ்லியின் நா(தா)ய்ப்பாசம்...
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் அரசு கல்லுாரிக்கு அடுத்து உள்ளது அருணாச்சலா விலங்குகள் சரணாலயம் மற்றும் பாதுகாப்பு மையம்.


@1br@@அந்த இடத்தில் மொத்தம் 220 தெரு நாய்கள் இருக்கின்றன.

அவற்றில் சில நாய்கள் முன்னங்கால் பின்னங்கால் அடிபட்டு நடக்கமுடியாமல் இழுந்து இழுத்து நடந்து கொண்டிருந்தன, சில நாய்கள் கண் பார்வை இல்லாமல் எதன் மீதாவது முட்டி மோதி திரும்பிக் கொண்டு இருந்தன, சில நாய்கள் தோல் பிரச்னை காரணமாக மோசமாக தோற்றத்தில் இருந்தன, இன்னும் சில நாய்கள் எந்தவித சலனமும் இல்லாமல் படுத்த படுக்கையாக இருந்தன ஆனால் அவை அனைத்துமே அமைதியாக இருந்தது.

இரண்டு நாய்கள் சேர்ந்தாலே குரைத்து அந்த இடத்தையே சத்தக்காடாக்கிவிடும் நிலையில் இத்தனை நாய்கள் சேர்ந்து இருந்தும் அமைதியாக இருந்ததுடன் எவையும் சோர்ந்து விடாமல் ஒரு சந்தோஷ சூழ்நிலையில் இருந்தது.எந்த நாயும் கூண்டுக்குள் அடைக்கப்படவில்லை சுதந்திரமாக சுற்றி வந்தன, நாற்காலிகளில் விருந்தினர் போல ஜம்மென்று உட்கார்ந்து இருந்தன.

வியப்புடன் இந்த சூழ்நிலையை மனதில் வாங்கி ரசித்துக் கொண்டிருந்த நேரம் ஒரு வயதான வெளிநாட்டுக்காரர் அந்த இடத்திற்குள் நுழைந்தார் அவரைப்பார்த்ததும் அத்துணை நாய்களும் அவர் மீது பாய்ந்து அவர் மேல் ஏறி கொஞ்சி விளையாடி தங்களது பாசத்தை பொழிந்தன.அவரும் அத்தனை நாய்களுக்கும் வஞ்சகமில்லாமல் முத்தத்தை வாரி வழங்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

அவர்தான் 82 வயதாகும் லெஸ்லி ராபின்சன் இந்த நாய்கள் சரணாலயத்தின் நிறுவனர்.அமெரிக்காவின் சிக்காக்கோ நகரைச் சேர்ந்த இவர் இந்தியாவின் ஆன்மீக விஷயங்களால் ஈர்க்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு பயணித்தவர் கடந்த 2007 ம் ஆண்டு திருவண்ணாமலை வந்தார்.

அப்போது திருவண்ணாமலை நகராட்சி பொதுமக்களுக்கு இடையூறாக தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கொல்வதற்கு முடிவு செய்திருந்தது.
இதைக்கேள்விப்பட்டவர், 'நாய்களைக் கொல்ல வேண்டாம் நான் என் சொந்த செலவில் பாரமரித்துக் கொள்கிறேன் என்னிடம் கொடுத்துவிடுங்கள்' என்று கேட்டு அப்போது அரசின் அனுமதியுடன் ஆரம்பித்ததுதான் இந்த நாய்கள் சரணாலயம்.

நாய்கள் சரணாலயம் ஆரம்பித்த பிறகு லெஸ்லி எங்கும் போகவில்லை, முறைப்படி அனுமதி பெற்று இங்கேயே தங்கிவிட்டார்.சரணாலயத்தில் உள்ள நாய்களின் நோய் தீர்க்கவும் பராமரிக்கவும் வளாகத்திற்கு உள்ளேயே மிருக வைத்தியசாலையையும் துவங்கினார்.

இதன் காரணமாக வாகனங்களால் அடிபட்ட,சொரி பிடித்த நிலையில் வளர்த்தவர்களாலயே விரட்டிவிடப்பட்ட,பராமரிப்பு இல்லாமல் குப்பை தொட்டிகளில் வீசி எறியப்பட்ட,முதுமையால் பாதிக்கப்பட்ட,நோய்வாய்ப்பட்ட எல்லாவித நாய்களும் இங்கு வந்து சேர்ந்தன.

இப்படிப்பட்ட நாய்கள் பற்றி ஒரு போன் செய்தால் போது இவர்களே போய் சம்பந்தப்பட்ட நாயை மீட்டு வந்து உரிய சிகிச்சை கொடுத்து காப்பாற்றி இங்கேயே வைத்து பராமரிக்கின்றனர்.

ஒரு நாய் பிறந்து ஒரு வருடத்தில் தாயாகவும் தந்தையாகவும் மாறிவிடும் சூழலில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை என்பது அவசியம் இல்லாவிட்டால் இரண்டு நாய்கள் சேர்ந்து நம்பவே முடியாதபடி தனது இனத்தை சில வருடங்களில் பல ஆயிரத்திற்கு பெருக்கிவிடும்.

இந்த இனப்பெருக்கம் சமூகத்திற்கு கேடு என்பதால் அரசு சார்பில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது.சுமார் ஐநுாறு ரூபாய் செலவு பிடிக்கும் இந்த கருத்தடை சிகிச்சை இந்த சரணாலயத்தில் இலவசமாக செய்யப்படுகிறது.

மனிதர்களுக்கு வருவது போலவே கேன்சர் உள்ளீட்ட எல்லா நோய்களும் நாய்களுக்கும் வருவதால் அவைகளுக்கு உயர் சிகிச்சை வழங்க இங்கு இரண்டு டாக்டர்கள் தலைமையில் செவிலியர்கள் பராமரிப்பாளர்கள் என 23 பேர் பணியாற்றுகின்றனர் அதிலும் அவசரகால சிகிச்சை தர 24 மணி நேர சிகிச்சை மையமும் இயங்குகிறது.

அன்றாடம் கொண்டுவரப்படும் நாய்களுக்கு மருந்து மாத்திரை சிகிச்சை மற்றும் இங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ள நாய்களுக்கு சாப்பாடு மருத்துவர்கள் உள்ளீட்ட ஊழியர்கள் சம்பளம் சரணாலயத்தின் பராமரிப்பு என மாதம் ஏழு லட்ச ரூபாய் வரை செலவாகிறது, இந்த மொத்த செலவையும் நிறுவனர் லெஸ்லிதான் பார்த்துக் கொள்கிறார்.

தனது சேமிப்பில் இருந்து வரும் வருமானம் மற்றும் அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் தரும் நன்கொடையால் சரணாலயம் இயங்கிவருகிறது.சமாளிக்க முடியாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி வந்துவிட்டால் அமெரிக்கா சென்று நண்பர்களை பார்த்து நிதி திரட்டிவந்துவிடுவார்.யாரிடமும் நேரடியாக நன்கொடை கேட்பது இல்லை சரணாயத்திற்கான வெப்சைட் பார்த்துவிட்டு கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறார் அதற்கான இணையதள முகவரி:www.arunachalasanctuary.com

இப்போது இரண்டு விஷயங்கள் நடந்து வருகிறது ஒன்று நாய்களுக்கு தரப்படும் உயர் சிகிச்சை காரணமாக குரங்குகள் மாடுகள் பறவைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பல்வேறு விலங்குகள் பறவைகள் எல்லாம் இங்குதான் சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்றன.வீட்டில் வைத்து வளர்க்கப்படும் நாய்கள்,மாடுகள் கூட இங்குதான் சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகின்றது.

செலவும் கூடிக்கொண்டே போகிறது இட நெருக்கடியும் ஏற்பட்டுவருகிறது ஆகவே திருவண்ணாமலையில் கொஞ்சம் பெரிய இடமும் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது.'விசாலமான' மனமும், பணமும் கொண்டவர்கள் இந்த சரணாலயத்திற்கு உதவலாம், மேலும் விவரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் டாக்டர் ராஜசேகரன் எண்:9698194053,சரணாலயத்திற்கான
எண்:9442246108.

சரணாலயத்தை விட்டு வெளியே வரும் போது வெளிச்சுவரில் மகாத்மா காந்தி சொன்ன வாசகம் எழுதப்பட்டு இருந்தது,அந்த வாசகம் இதுதான்
'ஒரு நாட்டின் பெருமையையும் அறத்தின் வளர்ச்சியையும் அங்கு விலங்குள் நடத்தப்படுவதைக் கொண்டு மதிப்பிடலாம்'.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Kalpana Venkataraman - Princeton, NJ,யூ.எஸ்.ஏ

  I suggest that this sanctuary to approach America's Humane Society for funding. The Humane Society of the United States: www.humanesociety.org/ The Humane Society of the United States is the nation's largest and most effective animal protection organization.

 • Prabhakaran - Delhi,இந்தியா

  லெஸ்லி ராபின்சன் பறந்த மனது பின்பற்றப்பட வேண்டியது. மனிதர்களில் ஒரு பிரிவினரை சூத்திரன் எனும் பெயரில் அடிமை படுத்தி வைத்திருக்கும் மதம்தான் இந்து மதம். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல புராண கதைகளில் வருவது வாழ்க்கைக்கு உதவாது. இன்று எண்ணற்ற காட்டு விலங்குகள் நம்மிடம்(மனிதர்கள் வாழும் பகுதியில்) இல்லை. நாம் விட்டு வைத்திருக்கும் விலங்குகள் எல்லாமே மனிதர்களுக்கு விசுவாசமான, தீங்கு செய்யாத அல்லது மனிதர்களுக்கு அடிமை விலங்குகளை மட்டுமே. உலகத்தில் அனைவரும் இவ்வசயத்தில் ஒன்றே, இந்து மதம் பற்றி செருக்கு கொள்ள இதில் ஒன்றும் இல்லை. உங்களுக்கு பாலும் நெய்யும் வேண்டும் என்பதற்க்காக மாடுகளை குறுகிய இடத்தில அடைத்து அதன் இரத்தத்தை உறிஞ்சுவதற்கும் அவற்றை கொள்வதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

 • siva india - chennai,இந்தியா

  வல்லாரை இவரிடம் பார்க்கமுடிகிறது.சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஹிந்து மதம் ஒரு மனிதனை எந்த அளவிற்கு பண்படுத்தும் என்பதற்கு இவர் ஒரு சான்று. உலக மதங்களிலேயே மிருகங்கள் மீது அன்பையும், அதை மரியாதை செலுத்துவதும் ஹிந்து மதம் மட்டுமே. இங்கு தான் விநாயகருக்கு மூஞ்சுறு, முருகனுக்கு மயில், சிவனுக்கு காளை மற்றும் நாகம் , பார்வதி தேவிக்கு புலி, ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பசு, என்று அனைத்து மிருகங்களும் இறைவனின் தோழர்களாக இருக்கின்றனர். காகம் கூட சனிபகவானுக்கு வாகனம். எறும்பிற்கு கூட கோலம் என்ற பெயரில் அரிசி மாவை போட்டு உணவளிக்க வற்புத்துகிறது, ஹிந்து மதம். அற்புதத்தின் அற்புதம் இந்த ஹிந்து மதம்..இதில் இணைபவர்கள் அன்பில் கரைந்துவிடுவார்கள். மனிதனை மாண்புற செய்வது இந்த மதம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement