Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

நன்மை செய்யும் கருப்பு


பொருளாதாரத்தில் தான் கருப்பு பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் உடலுக்கு கருப்பு நிறம் நன்மை தான் செய்கின்றது. சூரியனின் 'அல்டிரா வயலட்' கதிர்கள் நம் மேல் விழும்போது, அதன் கதிர்களினால் நமது தோலில் 'கேன்சர்' வராமல் இருக்க இயற்கையாகவே 'மெலனின்' என்ற ஒரு கருப்பு நிறம் சேர்க்கப்படுகிறது. இதனால் தான் நமது உடலில் வெயில் படும் இடங்கள் கருத்தும் உடையினால் மூடப்பட்ட இடங்கள் கொஞ்சம் வெளுத்தும் இருக்கின்றது. . கண்ணில் 'ரெட்டினா'வின் பின்புறம் உள்ள மெலனின் கண்ணின் பார்வையை கூர்மையாக்குகிறது.

தகவல் சுரங்கம்

திருவண்ணாமலை பழமொழிகள்


அருணாசலபுராணம் என்ற நுாலை சைவ எல்லப்ப நாவலர், 16ம் நுாற்றாண்டில் தொகுத்தார். இந்த நுால் திருவண்ணாமலையின் வரலாற்றைக் கூறுகிறது. இதனால் தான் 'அண்ணாமலையில் பிறந்தவனுக்கு அருணாசலபுராணம் தெரியாதா' எனும் பழமொழி வந்தது. திருவண்ணாமலையில் இறைவனை விட சாது, சன்னியாசி, சாமியார்களுக்கு தான் அதிக சிறப்பு என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் 'அண்ணாமலையாருக்கு அறுபத்து நாலு பூஜை; ஆண்டிகளுக்கு எழுபத்து நாலு பூஜை' என்பர். வீண் செலவு, தண்டச் செலவைக் குறிக்க 'உண்ணாமல் தின்னாமல் அண்ணாமலைக்கு அரோகரா' என கூறுவர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement