Advertisement

டீ கடை பெஞ்ச்

ஜனாதிபதி தேர்தலில் வியூகம் வகுக்கும் கட்சிகள்


''ரெண்டு கட்சியில இருந்தும், இழுத்து போட முயற்சி பண்ணுதாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி
அண்ணாச்சி.
''அந்த அளவுக்கு கிராக்கியான ஆள் யாரு பா...'' என்றார் அன்வர் பாய்.''அ.தி.மு.க.,
நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்த்ராஜ் தான், முதல்ல சசிகலாவுக்கு எதிரா குரல் கொடுத்தார்... 'சசிகலாவும், அவங்க குடும்பமும் கட்சியில இருந்து ஒதுங்கணும்'னு
பிரச்னைக்கு திரி கிள்ளுனாரு வே...
''இப்ப, பழனிசாமி, பன்னீர்னு எந்த பக்கமும் சாயாம, நடுவாந்திரமா இருக்கார்... நடப்பு அரசியலை, நையாண்டியா பேசக்கூடிய அவரை, இழுத்து போட, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முயற்சி பண்ணுது...
''ஆனா, ஆனந்த்ராஜ், யாருக்கும் பிடி கொடுக்காம, ரெண்டு அணிகள் இணைப்புக்காகவும் காத்திருக்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''பி.ஏ., பதவியை பிடிக்க போட்டி போடுறாங்க...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''அமைச்சரின், பி.ஏ., பதவியா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''இல்லை... பத்திரப்பதிவு துறையின், புது ஐ.ஜி.,யா ஹன்ஸ்ராஜ் வர்மா வந்திருக்காரே... பொதுவா, ஐ.ஜி.,க்கு பி.ஏ.,வா, டி.ஐ.ஜி., அந்தஸ்து அதிகாரியை தான் நியமிப்பாங்க...
''ஆனா, இப்ப இருக்கிற, ஐ.ஜி.,யிடம், இந்த துறை கூடுதல் பொறுப்பா தான் இருக்குங்க... அதனால, பி.ஏ., பதவியை பிடிச்சா, நல்ல லாபம் பார்க்கலாம்னு கூடுதல், ஐ.ஜி.,க்கள் சிலர் கணக்கு போடுறாங்க...
''இடையில, விதிப்படியும், திறமை அடிப்படையிலும், டி.ஐ.ஜி., ஒருத்தரை தேர்வு செஞ்சாங்க... ஆனா, கூடுதல், ஐ.ஜி.,க்கள், அந்த நியமனத்துக்கு முட்டுக்கட்டை போட்டுட்டாங்க... 'எங்கள தாண்டி வேறு யாரையும், பி.ஏ., பதவிக்கு விடமாட்டோம்'னு சபதமே போட்டிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ஜனாதிபதி தேர்தல், சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர் பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''பா.ஜ., - காங்., அணியில, இன்னும் வேட்பாளரை தேர்வு செய்யலைன்னாலும், நாடு முழுக்க அரசியல் கட்சிகளின் ஆதரவை வாங்குறதுல, ரெண்டு கட்சிகளுமே தீவிரமா களம் இறங்கிட்டாங்க பா...
''பா.ஜ., சார்புல, பிராமணர் அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை, வேட்பாளரா தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கு... உ.பி.,யில பிராமணர் அல்லாதவரை முதல்வர் ஆக்குனதால, அந்த சமுதாயத்தினர் அதிருப்தியில இருக்காங்க.... அதனால, அவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்னு சொல்றாங்க பா...
''அதே மாதிரி, காங்., அணியில, கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை நிறுத்தினா, மம்தா, பிஜு பட்நாயக் ஆதரவு கிடைக்காது... அதனால, சரத் யாதவ் அல்லது சரத் பவார் மாதிரி பொது வேட்பாளரை நிறுத்தினா என்னன்னு, காங்கிரஸ்ல ஆலோசிக்கிறாங்க...
''ஒருவேளை, 'மாஜி' பிரதமர் மன்மோகன் சிங்கையே களம் இறக்கினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை பா...'' என, அன்வர் பாய் முடிக்கவும், பெஞ்ச் மவுனமானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • n.jebamoni - west palmbeach,யூ.எஸ்.ஏ

  The position of the President of India is nothing but a garnish in the dinner plate. Robot with the remote control in the hands of ruling party. There is no influence of e or religion in the robot machine

 • selvaraj - chennai,இந்தியா

  நாட்டில் அரசியல் சாசனப்படி உயர் பதவியான குடியரசுத்தலைவர் பதவிக்கு கூட ஜாதி பார்க்கலாமா. தகுதியும் பண்பும் வாய்ந்த நாட்டிற்கு உழைத்த, வருங்கால இந்தியாவிற்கு வழிகாட்டும் ஆற்றல் பெற்ற ஒருவரை குடியரசுத்தலைவர் ஆக்குவதே சிறந்தது. அத்தகைய குடியரசுத் தலைவரை மக்கள் தாங்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாதது ஒரு பெரும் குறையாகும்.

 • Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா

  ''ஒருவேளை, 'மாஜி' பிரதமர் மன்மோகன் சிங்கையே களம் இறக்கினாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லை பா...'' என, அன்வர் பாய் முடிக்கவும், பெஞ்ச் மவுனமானது. அய்யய்யோ மறுபடியும் மௌன சாமியாரா???????

 • sriram - chennai,இந்தியா

  Dr. B.M Hegde ஐ ஜனாதிபதியாக தேர்வு செய்யலாம் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement