காத்மண்டு: தெற்காசிய கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி 3-0 என வங்கதேசத்தை வீழ்த்தியது.
தெற்காசிய கால்பந்து தொடர் (19 வயதுக்குட்பட்ட) நேபாளத்தில் நடக்கிறது. இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் வங்கதேசத்தை சந்தித்தது. போட்டி துவங்கிய 34வது வினாடியில் இந்திய வீரர் கோவர்வ், முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+5 வது) இந்திய வீரர் மீட்டெய் தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் இந்திய வீரர் அர்ஜுன் (90 வது) ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்து பூடானை (செப். 25) சந்திக்கவுள்ளது.
இதில் வென்றால் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!