Load Image
Advertisement

சுவீடன் வீரர் உலக சாதனை: 'போல் வால்ட்' போட்டியில் கலக்கல்

ஈகுனே: 'போல் வால்ட்' போட்டியில் சுவீடன் வீரர் டுப்லாண்டிஸ் மீண்டும் உலக சாதனை படைத்தார்.

அமெரிக்காவில், 'டைமண்ட் லீக் பைனல்ஸ்' தடகளப் போட்டி நடந்தது. ஆண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் நார்வேயின் ஆர்மண்ட் டுப்லாண்டிஸ் 23, உட்பட 7 பேர் பங்கேற்றனர். அதிகபட்சமாக 6.23 மீ., தாண்டிய இவர், முதலிடம் பிடித்து 'ஹாட்ரிக்' சாம்பியன் பட்டத்தை (2021, 2022, 2023) கைப்பற்றினார். தவிர இவர், தனது சொந்த சாதனையை முறியடித்து, தொடர்ந்து 7வது முறையாக உலக சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் பிரான்சில் நடந்த போட்டியில் பங்கேற்ற இவர், 6.22 மீ., தாண்டி உலக சாதனை படைத்திருந்தார்.



டுப்லாண்டிஸ், டோக்கியோ ஒலிம்பிக் (2020), உலக (2022, 2023), உலக உள்ளரங்கு (2022), ஐரோப்பிய (2018), ஐரோப்பிய உள்ளரங்கு (2021), உலக ஜூனியர் (2018), ஐரோப்பிய ஜூனியர் (2017), உலக யூத் (2015) சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.



5000 மீ., சாதனை: பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில், பந்தய துாரத்தை 14 நிமிடம், 00.21 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த எத்தியோபியாவின் குடாப் செசே, முதன்முறையாக 'டைமண்ட் லீக் பைனல்சில்' சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். தவிர இவர், இலக்கை அதிவேகமாக கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த போட்டியில் கென்யாவின் பெய்த் கிபிகோன், பந்தய துாரத்தை 14 நிமிடம், 05.20 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement