லாசேன்: சர்வதேச ஹாக்கி தரவரிசையில் இந்திய அணி 3வது இடத்தில் நீடிக்கிறது.
ஹாக்கி போட்டியில் சிறந்து விளங்கும் ஆண்கள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) வெளியிட்டது. இதில் இந்திய அணி 2771.35 புள்ளிகளுடன் 'நம்பர்-3' இடத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த மாதம் சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்ற இந்தியா, 7 போட்டியில், 6 வெற்றி, ஒரு 'டிரா' என தோல்வியை சந்திக்காமல் வலம் வந்தது.
முதலிரண்டு இடங்களில் நெதர்லாந்து (3112.74), பெல்ஜியம் (2988.58) அணிகள் தொடர்கின்றன. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த மலேசிய அணி (2041.37) 10வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரான்ஸ் அணி (2085.02) 9வது இடத்துக்கு முன்னேறியது.
பெண்கள் முன்னேற்றம்: பெண்கள் அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி, 2324.56 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து 'நம்பர்-7' இடத்துக்கு முன்னேறியது. ஸ்பெயின் அணி (2172.73) 8வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் 12வது முறையாக கோப்பை வென்ற நெதர்லாந்து (3422.40) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறது. அடுத்த நான்கு இடங்களில் ஆஸ்திரேலியா (2817.73), அர்ஜென்டினா (2766.90), பெல்ஜியம் (2608.77), ஜெர்மனி (2573.72) அணிகள் உள்ளன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!