Load Image
Advertisement

பிரேசில் அணிக்கு அதிர்ச்சி

சான் ஜுவான்: உலக கோப்பை கால்பந்து (20 வயது) காலிறுதியில் ஏமாற்றிய பிரேசில் அணி 2-3 என, இஸ்ரேலிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.

அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. சான் ஜுவானில் நடந்த காலிறுதியில் பிரேசில், இஸ்ரேல் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பிரேசில் அணிக்கு 56வது நிமிடத்தில் மார்கஸ் லியோனார்டோ ஒரு கோல் அடித்தார். இதற்கு, 60வது நிமிடத்தில் இஸ்ரேலின் அனன் கலாய்லி ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.

பின், இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் பிரேசிலின் மதியஸ் நாசிமென்டோ (91வது நிமிடம்), இஸ்ரேலின் ஹம்சா ஷிப்லி (93வது) அடுத்தடுத்து கோல் அடித்தனர். அபாரமாக ஆடிய இஸ்ரேல் அணிக்கு 105வது நிமிடத்தில் டோர் டேவிட் துர்கேமன் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். இதற்கு, பிரேசில் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இம்முறை அறிமுகமான இஸ்ரேல் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

மற்றொரு காலிறுதியில் கொலம்பியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் இத்தாலி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement