Load Image
Advertisement

சவுதி லீக்கில் மெஸ்சி, பென்சிமா

பாரிஸ்: சவுதி அரேபியா லீக் கால்பந்து தொடரில் மெஸ்சி, பென்சிமா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.

கால்பந்து உலகில் பிரிமியர் லீக் (இங்கிலாந்து), லா லிகா (ஸ்பெயின்) உட்பட பல லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு சவால் தர சவுதி அரேபியா லீக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதை பிரபலப்படுத்த நட்சத்திர வீரர்களுக்கு வலை வீசி வருகிறது.

இதில் ஏற்கனவே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (அல் நாசர் கிளப், ரூ. 1740 கோடி) சிக்கிவிட்டார். இதற்கிடையே, மெஸ்சி (அர்ஜென்டினா), பென்சிமா (பிரான்ஸ்) உள்ளிட்ட வீரர்கள் விரைவில் இத்தொடரில் இணைய உள்ளனர்.

ரூ. 3089 கோடி

கடந்த 'பிபா' உலக கோப்பையில் மெஸ்சி, 35, தேசிய அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று தந்தார். பிரான்சின் 'லீக் ஒன்' தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.,) கிளப் அணியில் விளையாடி வந்தார்.

கிளர்மன்ட் அணிக்கு எதிரான போட்டியுடன் பி.எஸ்.ஜி., அணிக்கு 'குட்-பை' சொன்னார். வரும் 30ம் தேதி ஒப்பந்தம் முடிந்தவுடன், சவுதி லீக் கிளப் அணியான அல் ஹிலால் அணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இவரை ரூ. 3089 கோடிக்கு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.

பென்சிமாவுக்கு எவ்வளவு

பென்சிமாவை, 35, பொறுத்தவரை ரியல் மாட்ரிட் அணிக்காக 14 ஆண்டு (2009-23) விளையாடி வந்தார். சமீபத்தில் அணியிலிருந்து விலகிய இவர், சவுதி லீக் கிளப் அணியான அல் இதிகாத்தில் இணைய உள்ளதாக தெரிகிறது. பென்சிமா ரூ. 900 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து நட்சத்திர வீரர்களின் வருகையால் சவுதி லீக் தொடர் களை கட்ட துவங்கி உள்ளது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement