துபாய்: சவுதி அரேபிய அணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார் ரொனால்டோ.
போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 37. கிளப் அரங்கில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார். பயிற்சியாளருடன் ஏற்பட்ட மோதல், போதிய அளவு போட்டி இல்லாதது போன்ற காரணங்களால், மான்செஸ்டர் அணியில் இருந்து விலகினார்.
பின் சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக, ஆண்டுக்கு ரூ. 1740 கோடி சம்பளத்தில் கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் ஆனார். ரொனால்டோ பங்கேற்ற முதல் சீசனில் 19 போட்டியில் 14 கோல் அடித்தார். சமீபத்தில் முடிந்த சவுதி அரேபிய லீக் தொடரில் தொடரில் அல் நாசர் அணி இரண்டாவது இடம் பிடித்தது.
தற்போது மீண்டும் அணி மாற முடிவு செய்துள்ளார் ரொனால்டோ. ஸ்பெயினில் நடக்கும் லா லிகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாட விரும்புவதாக செய்தி வெளியாகின. இதுகுறித்து அத்லெடிக் மாட்ரிட் தலைவர் என்ரிக் செரெஜோ கூறுகையில்,'' இதுபோன்ற செய்திகளை யார் வெளியிடுகின்றனர் எனத் தெரியவில்லை. இதில் உண்மையில்லை,'' என்றார்.
மெஸ்சி 'கெடு'
கிளப் அரங்கில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடுகிறார் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சி. இவரது ஒப்பந்தம் ஜூன் 30ல் முடிகிறது. இவர் மீண்டும் பார்சிலோனா அணிக்கு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து 10 நாளில் முடிவை அறிவிக்குமாறு பார்சிலோனா அணிக்கு மெஸ்சி கெடு விதித்துள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!