சான் ஜுவான்: உலக கோப்பை கால்பந்து (20 வயது) 'ரவுண்டு-16' போட்டியில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறின.
அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. சான் ஜுவானில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் அர்ஜென்டினா, நைஜீரியா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட நைஜீரிய அணிக்கு இப்ராஹிம் முகமது (61வது நிமிடம்), ரில்வானு சார்கி (90+1வது) கைகொடுத்தனர்.
சொந்த மண்ணில் கடைசி நிமிடம் வரை போராடிய அர்ஜென்டினா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.
இங்கிலாந்து 'அவுட்'
லா பிளாட்டாவில் நடந்த மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, இத்தாலி அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இங்கிலாந்து அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் பிரேசில் அணி 4-1 என துனிசியாவை வென்றது. கொலம்பியா அணி 5-1 என சுலோவாகியாவை தோற்கடித்தது.
காலிறுதியில் பிரேசில்-இஸ்ரேல் (ஜூன் 3), கொலம்பியா-இத்தாலி (ஜூன் 3) அணிகள் மோதுகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!