மென்டோசா: உலக கோப்பை கால்பந்து (20 வயது) காலிறுதிக்கு அமெரிக்கா, இஸ்ரேல் அணிகள் முன்னேறின.
அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. மென்டோசாவில் நடந்த முதல் காலிறுதியில் அமெரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. அபாரமாக ஆடிய அமெரிக்க அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. அமெரிக்கா சார்பில் மைக்கேல் வோல்ப் (14வது நிமிடம்), டிலான் கோவெல் (61வது), இசியா சே (76வது), ரோகாஸ் புக்ஸ்டாஸ் (82வது) தலா ஒரு கோல் அடித்தனர்.
காலிறுதியில் அமெரிக்க அணி, உருகுவே அல்லது காம்பியாவை எதிர்கொள்ளலாம்.
உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சி: மென்டோசாவில் நடந்த மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் உஸ்பெகிஸ்தான், இஸ்ரேல் அணிகள் மோதின. இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+7வது) அனன் கலாலி ஒரு கோல் அடித்த கைகொடுக்க, இஸ்ரேல் அணி 1-0 என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. 'நடப்பு ஆசிய சாம்பியன்' உஸ்பெகிஸ்தான் அணி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.
காலிறுதியில் இஸ்ரேல் அணி, பிரேசில் அல்லது துனிசியாவை சந்திக்க நேரிடும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!