ஆக்ஸ்பர்க்: நட்பு கால்பந்து போட்டியில் இளம் இந்திய அணி, ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் (17 வயதுக்குட்பட்ட) தாய்லாந்தில் நடக்கவுள்ளது. இதில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, வியட்நாம் (ஜூன் 17), உஸ்பெகிஸ்தான் (ஜூன் 20), ஜப்பான் (ஜூன் 23) அணிகளை சந்திக்க உள்ளது.
இதற்குத் தயாராகும் வகையில் இந்திய ஜூனியர் அணி, ஸ்பெயின், ஜெர்மனி சென்று பல்வேறு பயிற்சி போட்டிகளில் பங்கேற்றது. ஜெர்மனி சென்ற இந்திய அணி, கடைசி போட்டியில் ஆக்ஸ்பர்க் அணியை எதிர்கொண்டது.
16 வது நிமிடம் இந்தியாவின் லெம்மெட் முதல் கோல் அடித்தார். 22வது நிமிடம் ரோஹன் சிங், 37 வது நிமிடத்தில் பல்கரன் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் பாதியில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் காங்டே (55வது) தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!