லா பிளாட்டா: உலக கோப்பை கால்பந்து (20 வயது) 'நாக்-அவுட்' சுற்றுக்கு பிரான்ஸ் அணி தகுதி பெறத் தவறியது.
அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. பிரேசில், இங்கிலாந்து, கொலம்பியா, அர்ஜென்டினா உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.
லா பிளாட்டாவில் நடந்த 'எப்' பிரிவு லீக் போட்டியில் பிரான்ஸ், ஹோண்டுராஸ் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரான்ஸ் அணி 3-1 என வெற்றி பெற்றது. காம்பியா, தென் கொரியா அணிகள் மோதிய மற்றொரு 'எப்' பிரிவு போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. லீக் சுற்றின் முடிவில் 'எப்' பிரிவில் முதலிரண்டு இடங்களை பிடித்த காம்பியா (7 புள்ளி), தென் கொரியா (5) அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தன. பிரான்ஸ் அணி (3) பரிதாபமாக வெளியேறியது.
'இ' பிரிவு லீக் போட்டியில் உருகுவே அணி 1-0 என துனிசியாவை வென்றது. இங்கிலாந்து-ஈராக் மோதிய போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த இங்கிலாந்து (7), உருகுவே (6) அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறின.
ஒவ்வொரு பிரிவிலும் 3ம் இடம் பிடித்த அணிகளுக்கு இடையே 'டாப்-4' இடம் பிடித்த நைஜீரியா, நியூசிலாந்து, சுலோவாகியா, துனிசியா அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.
'நாக்-அவுட்' அட்டவணை
'ரவுண்டு-16' சுற்றில் அமெரிக்கா-நியூசிலாந்து (மே 30), உஸ்பெகிஸ்தான்-இஸ்ரேல் (மே 30), பிரேசில்-துனிசியா (மே 31), கொலம்பியா-சுலோவாகியா (மே 31), இங்கிலாந்து-இத்தாலி (மே 31), அர்ஜென்டினா-நைஜீரியா (மே 31), காம்பியா-உருகுவே (ஜூன் 1), ஈகுவடார்-தென் கொரியா (ஜூன் 1) அணிகள் மோதுகின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!