Load Image
Advertisement

உலக கால்பந்து: பிரேசில் அபாரம்

மென்டோசா: உலக கால்பந்து (20 வயது) 'நாக்-அவுட்' சுற்றுக்கு பிரேசில் அணி முன்னேறியது.

அர்ஜென்டினாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 23வது சீசன் நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, அமெரிக்கா, கொலம்பியா, இங்கிலாந்து உள்ளிட்ட 24 அணிகள் 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

மென்டோசாவில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் பிரேசில், நைஜீரியா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு 'டி' பிரிவு லீக் போட்டியில் இத்தாலி அணி 3-0 என டொமினிகன் குடியரசு அணியை வென்றது. மூன்று போட்டியில், 2 வெற்றி, ஒரு தோல்வி என, தலா 6 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை பிடித்த பிரேசில், இத்தாலி, நைஜீரியா அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தன.

கொலம்பியா 'டிரா'

லா பிளாட்டாவில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் கொலம்பியா, செனகல் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 1-2 என இஸ்ரேலிடம் வீழ்ந்தது. லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த கெலம்பியா (7 புள்ளி), இஸ்ரேல் (4) அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறின.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement