சங்வான்: பாரா துப்பாக்கிசுடுதல் உலக கோப்பை தொடரில் இந்தியாவின் அவனி லெஹரா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
தென் கொரியாவின் சங்வானில் பாரா துப்பாக்கிசுடுதல் உலக கோப்பை தொடர் நடக்கிறது. பாராலிம்பிக் சாம்பியன் அவனி லெஹரா, மணிஷ் நார்வல் உட்பட 15 பேர் இந்தியா சார்பில் களமிறங்கியுள்ளனர். இதில் அசத்தும் பட்சத்தில் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம்.
பெண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' ஸ்டாண்டிங் பிரிவில் இந்தியா சார்பில் அவனி லெஹரா பங்கேற்றார். டோக்கியோ பாராலிம்பிக்கில் அசத்திய இவர், தகுதிச்சுற்றில் மொத்தம் 626.5 புள்ளி பெற்று மூன்றாவது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். இதில் 0.1 புள்ளி வித்தியாசத்தில் முதலிடத்தை இழந்த அவனிக்கு (250.1), வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சுவீடனின் அன்னா பென்சன் (250.2) தங்கம் கைப்பற்றினார்.
ஆண்கள் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் ஸ்வரூப், 8வது இடம் பிடித்தார். கலப்பு இரட்டையர் 25 மீ., பிஸ்டல் பிரிவில் ஆமிர் ஜோடி பைனலில் 4வது இடம் பெற்றது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!