கல்லிதியா: கிரீஸ் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்.
கிரீசில் 13வது சர்வதேச நீளம் தாண்டுதல் ('ஜம்பிங்') போட்டி நடந்தது. கடந்த சீசனில் இங்கு 8.31 மீ., தாண்டி தங்கம் வென்ற இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் மீண்டும் அசத்தினார். முதல் வாய்ப்பில் 7.94 மீ., தாண்டிய ஸ்ரீசங்கர் அடுத்த ஐந்து வாய்ப்பில் (8.17 மீ., 8.11 மீ., 8.04 மீ., 8.01 மீ., 8.18 மீ.,) 8 மீ.,க்கும் அதிகமாக தாண்டினார்.
முடிவில் ஸ்ரீசங்கர் முதலிடம் (8.18 மீ.,) பிடித்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தங்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்டிரின், அதிகபட்சம் 7.85 மீ., துாரம் தாண்டி, இரண்டாவது இடம் பெற்று வெள்ளி வசப்படுத்தினார். 2022 சீசனில் இவர் ஐந்தாவது இடம் பெற்றிருந்தார். 'டிரிபிள் ஜம்ப்' பிரிவில் இடம்பெற்றபோதும் தமிழகத்தின் பிரவின் சித்ரவேல், உன்னிகிருஷ்ணன் போட்டியில் களமிறங்கவில்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!