லண்டன்: புரோ ஹாக்கி தொடரில் இந்திய அணி, வலிமையான பெல்ஜியத்தை சந்திக்கிறது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ ஹாக்கி லீக் தொடர் நடத்தப்படுகிறது. இந்தியா, ஜெர்மனி உட்பட 9 அணிகள் மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடம் பெறும் அணிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெறும். இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்தியா 8 போட்டியில் 7 வெற்றி, 1 தோல்வியுடன் 19 புள்ளி பெற்று முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரு இடத்தில் பிரிட்டன் (19), ஸ்பெயின் (17) உள்ளன.
இதனிடையே இன்று லண்டனில் நடக்கும் போட்டியில் உலகத் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள இந்திய அணி, உலகின் 'நம்பர்-2' அணியான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தனது வெற்றி நடையை தொடரும் என நம்பப்படுகிறது. தவிர மன்பிரீத் சிங், விவேக் பிரசாத், தில்பிரீத் சிங்கும் அணியின் வெற்றிக்கு உதவ காத்திருக்கின்றனர்.
இதற்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் 'அட்வைஸ்' கைகொடுக்கும் என நம்பலாம்.
இத்தொடரில் அடுத்து இந்திய அணி பிரிட்டன் (மே 27, ஜூன் 3), பெல்ஜியம் (ஜூன் 2) அணிகளை எதிர்கொள்கிறது.
இதன் பின் நெதர்லாந்து (ஜூன் 7, 10), அர்ஜென்டினா (ஜூன் 8, 11) அணிகளுடன் மோத காத்திருக்கிறது.
8
கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின் இந்தியா, பெல்ஜியம் அணிகள் 19 போட்டியில் மோதின. இந்தியா 8, பெல்ஜியம் 9ல் வென்றன. இரு போட்டி 'டிரா' ஆனது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!