Load Image
Advertisement

இந்திய பெண்கள் ஏமாற்றம்

அடிலெய்டு: ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

சீனாவின் ஹாங்சுவில் ஆசிய விளையாட்டு (செப். 23-அக். 8) நடக்கவுள்ளது. இதில் ஹாக்கியில் தங்கம் வென்றால், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். இதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் இரு போட்டியில் தோற்ற இந்தியா (0-2, 2-4), மூன்றாவது போட்டியை 'டிரா' (1-1) செய்தது. ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிராக களமிறங்கியது. 10 வது நிமிடம் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை இந்தியா வீணடித்தது.

பின் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு அர்னாட் (18வது), ரூபி ஹாரிஸ் (20 வது) தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 0-2 என பின் தங்கியது.இரண்டாவது பாதியில் மீண்டும் மிரட்டிய ரூபி மற்றொரு கோல் அடித்தார். இதன் பின் இந்தியாவின் சலிமா 40வது நிமிடம் ஒரு கோல் அடித்தார். 54 வது நிமிடம் சங்கிதா குமாரி தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்து உதவினார். இருப்பினும் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement