Load Image
Advertisement

காலிறுதியில் சிந்து * மாட்ரிட் பாட்மின்டனில் அபாரம்

மாட்ரிட்: ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் சிந்து, இந்தோனேஷியாவின் வர்தானியை எதிர்கொண்டார். முதல் செட்டை சிந்து 21-14 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் வர்தானி சற்று போராடிய போதும், கடைசியில் சிந்து 21-16 என வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்ரீகாந்த் அபாரம்

ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் மோதினர். இதில் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரீகாந்த், 21-15, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ், 17-21, 12-21 என டென்மார்க்கின் ஜோகன்னெசனிடம் வீழ்ந்தார். சமீர் வர்மா 21-14, 21-15 என ஜப்பானின் கன்டாவிடம் சரிந்தார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement