Load Image
Advertisement

இரண்டாவது சுற்றில் சிந்து * ஸ்பெயின் பாட்மின்டனில் அபாரம்

மாட்ரிட்: ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து முன்னேறினார்.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், தாய்லாந்தின் சித்திகோமை சந்தித்தார். முதல் செட்டை 21-11 என வென்ற ஸ்ரீகாந்த் அடுத்த செட்டை 25-27 என இழந்தார். மூன்றாவது, கடைசி செட்டை ஸ்ரீகாந்த் 23-21 என வென்றார். முடிவில் ஸ்ரீகாந்த் 21-11, 25-27, 23-21 என வெற்றி பெற்றார்.

இந்தியாவின் சாய் பிரனீத், செக் குடியரசின் ஜான் லவுடாவை 21-16, 18-21, 21-12 என்ற கணக்கில் சாய்த்தார்.

சிந்து வெற்றி

பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து, சுவிட்சர்லாந்தின் ஜென்சிராவை சந்தித்தார். இதில் சிந்து 21-10, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

ஆகர்ஷி அபாரம்

பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 'நம்பர்-42' இடத்திலுள்ள இந்தியாவின் ஆகர்ஷி, உலகின் 'நம்பர்-15' வீராங்கனை, கனடாவின் மிட்செல்லியை எதிர்கொண்டார். இதில் ஆகர்ஷி 12-21, 21-15, 21-18 என வெற்றி பெற்று அசத்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா, பிரான்சின் லியோனைசை 21-12, 22-20 என வென்றார்.

சாத்வித் காயம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் அயாட்டோ, யுடா ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 9-11 என பின்தங்கி இருந்தது. அப்போது சாத்விக்சாய்ராஜ் இடது முழங்கால் காயத்தால் அவதிப்பட, போட்டியில் இருந்து இந்திய ஜோடி வெளியேறியது.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி, 18-21, 16-21 என ஜப்பானின் ரேனா, அயாகோ ஜோடியிடம் தோல்வியடைந்தது.



Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement