Load Image
Advertisement

அஷ்வினி ஜோடி ஏமாற்றம் * மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

மாட்ரிட்: ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அஷ்வினி, சுமீத் ஜோடி தோல்வியடைந்தது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் சர்வதேச 'மாஸ்டர்ஸ்' பாட்மின்டன் தொடர் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா, சுமீத் ரெட்டி ஜோடி, சீனாவின் ஹே டிங், து டியு ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 17-21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 21-19 என கைப்பற்றி பதிலடி தந்தது.

மூன்றாவது, கடைசி செட்டை 13-21 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய ஜோடி 17-21, 21-19, 13-21 என்ற கணக்கில் போராடி வீழ்ந்தது.

மற்றொரு கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சிக்கி ரெட்டி, ரோகன் கபூர் ஜோடி 12-21, 22-20, 19-21 என இந்தோனேஷியாவின் அம்ரி, ஆக்டவினா ஜோடியிடம் தோற்றது.

ஆண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்றில் இந்தியாவின் பிரியான்சு, எஸ்தோனியாவின் பிரான்சிஸ்கோவை சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட பிரியான்சு, 21-16, 21-12 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மெய்ரபா, 14-21, 18-21 என பிரான்சின் அலெக்சிடம் வீழ்ந்தார்.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement