கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் மோகன் பகான் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 9வது சீசன் நடந்தது. கோவாவில் நடந்த பைனலில் மோகன் பகான், பெங்களூரு அணிகள் மோதின. மோகன் பகான் சார்பில் பெட்ராடஸ் (14, 85வது நிமிடம்) இரண்டு கோல் அடித்தார். பெங்களூரு அணிக்காக செத்ரி (45+5), ராய் கிருஷ்ணா (78) தலா ஒரு கோல் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் போட்டி 2-2 என சமநிலையை எட்டியது. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படாததால், ஆட்டம் 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் மோகன் பகான் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!