Load Image
Advertisement

நீத்து, பிரீத்தி, மஞ்சு கலக்கல் * உலக குத்துச்சண்டையில்...

புதுடில்லி: உலக குத்துச்சண்டையில் இந்தியாவின் நீத்து, பிரீத்தி, மஞ்சு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியாவின் டில்லியில் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 65 நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீராங்கனைகள், 12 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முதல் இரு நாள் களமிறங்கிய 7 பேரில், 6 வீராங்கனைகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

நேற்று நடந்த 48 கிலோ பிரிவு முதல் சுற்றில் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற இந்தியாவின் நீத்து கங்காஸ், தென் கொரியாவின் தோயியான் காங்கை சந்தித்தார். போட்டி துவங்கிய 2வது நிமிடத்தில் நீத்துவின் குத்துக்களை சமாளிக்க முடியாத காங், விலகிக் கொள்வதாக தெரிவித்தார். இதனால் போட்டியை நிறுத்திய நடுவர், நீத்து வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

54 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரீத்தி, ருமேனியாவின் லாக்ரமியோராவை எதிர்கொண்டார். முதல் சுற்றில் 3-2 என முந்திய பிரீத்தி, அடுத்த சுற்றை 2-3 என இழந்தார். மூன்றாவது, கடைசி சுற்று சமன் ஆனது. 'ரிவியூ' செய்ததில் பிரீத்திக்கு சாதகமாக தீர்ப்பு வர, 4-3 என வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் மஞ்சு (66 கிலோ), 5-0 என நியூசிலாந்தின் காராவை சாய்த்தார்.



Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement