பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் காயத்ரி-திரிஷா ஜோடி தோல்வியடைந்தது.
இங்கிலாந்தில் 'ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில்
உலகத் தரவரிசையில் 17 வது இடத்திலுள்ள இந்தியாவின் காயத்ரி 20, திரிஷா 19, ஜோடி, 20 வது இடத்திலுள்ள, உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்ற அனுபவம் வாய்ந்த, தென் கொரியாவின் பயேக் ஹா நா, லீ சோ ஹீ ஜோடியை சந்தித்தது.
கடந்த ஆண்டு அரையிறுதியில் போராடி தோற்ற இந்திய ஜோடி, இம்முறை எப்படியும் வெல்லும் என நம்பப்பட்டது. மாறாக துவக்கத்தில் இருந்தே திணறலான ஆட்டத்தை இந்திய ஜோடி வெளிப்படுத்தியது. முதல் செட்டில் 5-11 என பின்தங்கிய இந்திய ஜோடி முடிவில் 10-21 என இழந்தது.
இரண்டாவது செட்டிலும் தென் கொரிய ஜோடி ஆட்டத்திற்கு கொஞ்சம் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. இம்முறையும் இந்திய ஜோடி 10-21 என கோட்டை விட்டது. 46 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 10-21, 10-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!