கொச்சி: கேரளா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி 1-2 என தோல்வியடைந்தது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 9வது 'சீசன்' நடக்கிறது. கொச்சியில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கொச்சி அணிகள் மோதின. துவக்கத்திலேயே சென்னை அணி அசத்தியது. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் அப்டென்சர் கைகொடுக்க, சென்னை முதல் கோலை பதிவு செய்தது. இதற்கு, 33வது நிமிடத்தில் கேரளா பதிலடி தந்தது. சென்னை அணியின் தற்காப்பு வீரர்களை ஏமாற்றி லுானா உதைத்த பந்து பறந்து சென்றது. கோல்கீப்பரும் தடுக்க முடியாமல் போக பந்து வலைக்குள் சென்றது. உள்ளூர் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் பாதி முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் சென்னை அணிக்கு எதிரணியின் அதிர்ச்சி கொடுத்தனர். 64வது நிமிடத்தில் ராகுல் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இதன்பின், சென்னை அணி மீளவே இல்லை. வழக்கம்போல, முன்னிலையை தவறவிட்ட சென்னை அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதுவரை சென்னை அணி 17 லீக் போட்டியில் 4 வெற்றி, 7 தோல்வி, 6 'டிரா' என மொத்தம் 18 புள்ளியுடன் 8வது இடத்தில் உள்ளது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!