தாகா: தெற்காசிய கால்பந்து (20 வயது) லீக் போட்டியில் இந்திய அணி, 1-3 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது.
வங்கதேசத்தில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 4வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம் என 4 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் பூடானை (12-0) வென்ற இந்தியா, அடுத்து வங்கதேசத்துடன் (0-0) 'டிரா' செய்தது.
நேற்று மூன்றாவது போட்டியில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. போட்டியின் 21வது நிமிடம் அபர்னா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் நேபாள வீராங்கனைகள் பதிலடி கொடுத்தனர். 48 வது நிமிடம் அஞ்சலி, 69 வது நிமிடம் பிரீத்தி தலா ஒரு கோல் அடித்தனர். தொடர்ந்து 89 வது நிமிடத்தில் அமிஷா ஒரு கோல் அடித்தார். இந்திய தரப்பில் மீண்டும் கோல் எதுவும் அடிக்க வில்லை. முடிவில் இந்திய அணி 1-3 என தோல்விடையந்தது.
3 போட்டியில் 2ல் வென்ற நேபாள அணி பைனலுக்கு முன்னேறியது. இந்திய அணி (3ல் தலா ஒரு வெற்றி, தோல்வி, 'டிரா') ஏறக்குறைய பைனல் வாய்ப்பை கோட்டை விட்டது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!