அபுதாபி: அபுதாபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் சானியா ஜோடி தோல்வியடைந்தது.
அபுதாபியில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. சமீபத்தில் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் இருந்து விடைபெற்ற இந்தியாவின் சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் பங்கேற்றார்.
முதல் சுற்றில் சானியா, அமெரிக்காவின் பெத்தானியே மேடக் சாண்ட்ஸ் ஜோடி, பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ், ஜெர்மனின் சீஜ்மண்டு ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை சானியா ஜோடி 3-6 என இழந்தது. தொடர்ந்து ஏமாற்றிய இந்த ஜோடி, அடுத்த செட்டை 4-6 என கோட்டை விட்டது. ஒரு மணி நேரம், 13 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சானியா ஜோடி, 3-6, 4-6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!