ஜஜ்ஜார்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் வைதேகி, ஜீல் தேசாய் ஜோடி முன்னேறியது.
இந்தியாவின் ஜஜ்ஜாரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஜீல் தேசாய் ஜோடி, சக இந்திய ஜோடி ருதுபர்ணா, ரியா கூட்டணியை எதிர்கொண்டது. முதல் செட்டை 6-2 என வென்ற வைதேகி ஜோடி, அடுத்த செட்டை 6-0 என எளிதாக வசப்படுத்தியது. முடிவில் வைதேகி ஜோடி 6-2, 6-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஒற்றையரில் அபாரம்
ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி, சக வீராங்கனை ஈஸ்வரியை சந்தித்தார். இதில் வைதேகி 6-2, 6-0 என எளிதாக வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹுமேரா, சக வீராங்கனை ரியாவை 7-6, 6-2 என சாய்த்தார்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!