புதுடில்லி: ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் குன்னேஸ்வரன், 306வது இடத்துக்கு முன்னேறினார்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டுள்ளது. இதன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 342வது இடத்தில் இருந்து 306வது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த டென்மார்க் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பை மாற்று ஒற்றையர் போட்டியில் இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி தேடித்தந்தார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரரானார். இவரை அடுத்து, ஒரு இடம் முன்னேறிய சசிகுமார் முகுந்த், 398வது இடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 412வது இடத்துக்கு முன்னேறினார். டேவிஸ் கோப்பையில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்ற இந்தியாவின் சுமித் நாகல், 506வது இடத்தில் இருந்து 509வது இடத்துக்கு தள்ளப்பட்டார். டேவிஸ் கோப்பையில் ஒற்றையர், மாற்று ஒற்றையர் என இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய இந்தியாவின் யூகி பாம்ப்ரி, 112 இடம் பின்தள்ளப்பட்டு 683வது இடத்தில் உள்ளார்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!