தாகா: இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதிய தெற்காசிய கால்பந்து (20 வயது) லீக் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
வங்கதேசத்தில் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 4வது சீசன் நடக்கிறது. இதில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம் என 4 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, தனது முதல் போட்டியில் 12-0 என பூடானை வீழ்த்தியது.
நேற்று, தாகாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் இந்தியா சார்பில் அடிக்கப்பட்ட கோல், 'ஆப்-சைடு' என மறக்கப்பட்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 0-0 என 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் நேபாளம், பூடான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய நேபாளம் அணி 4-0 என வெற்றி பெற்றது. நாளை நடக்கவுள்ள கடைசி சுற்றுப் போட்டியில் இந்தியா-நேபாளம், வங்கதேசம்-பூடான் அணிகள் மோதுகின்றன.
இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில், ஒரு வெற்றி, ஒரு 'டிரா' என தலா 4 புள்ளிகளுடன் இந்தியா (+12 கோல் வித்தியாசம்), வங்கதேச (+2 கோல் வித்தியாசம்) அணிகள் முறையே முதலிரண்டு இடங்களில் உள்ளன. நேபாளம் அணி (3 புள்ளி) மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்த பூடான் அணி பைனல் வாய்ப்பை இழந்தது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!