மும்பை: மும்பை, ஐதராபாத் அணிகள் மோதிய விறுவிறுப்பான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, 'நடப்பு சாம்பியன்' ஐதராபாத் அணிகள் மோதின. இரு அணிகளும் ஏற்கனவே 'நாக்-அவுட்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தன.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் மும்பை அணிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் பெரேரா டயஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு ஐதராபாத் வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் மும்பை அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஐதராபாத் அணிக்கு 65வது நிமிடத்தில் ஹிதேஷ் சர்மா ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
இதுவரை விளையாடிய 17 போட்டியில், 13 வெற்றி, 4 'டிரா' உட்பட 43 புள்ளிகளுடன் மும்பை அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐதராபாத் அணி 16 போட்டியில், 11 வெற்றி, 3 'டிரா', 2 தோல்வி என 36 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஜாம்ஷெட்பூர் வெற்றி
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜாம்ஷெட்பூர் அணி 17 போட்டியில், 3 வெற்றி, 3 'டிரா', 11 தோல்வி என 12 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. வடகிழக்கு அணி 17 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு 'டிரா', 15 தோல்வி என, 4 புள்ளிகளுடன் கடைசி இடமான 11வது இடத்தில் உள்ளது.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!