பியுனோ ஏர்ஸ்: ''கால்பந்து மீதான காதல் எப்போதும் தொடரும். வயது, உடற்தகுதி உள்ளிட்ட விஷயங்கள்தான் அடுத்த உலக கோப்பை தொடரில் பங்கேற்பதை தீர்மானிக்கும்,'' என, அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி தெரிவித்தார்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சி, 35. கத்தார் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று தந்தார். அடுத்து 2026 உலக கோப்பை தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடக்கவுள்ளது. அப்போது மெஸ்சியின் வயது 39 ஆக இருக்கும்.
இது குறித்து மெஸ்சி கூறுகையில்,'' கால்பந்து மீதான எனது காதல் எப்போதும் தொடரும். இதை மிகவும் ரசித்து விளையாடுகிறேன். தற்போது உடற்தகுதியுடன் இருந்தாலும், 2026 உலக கோப்பை தொடரின் போது எப்படி இருப்பேன் என சொல்ல முடியாது. வயதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அர்ஜென்டினா அணி பயிற்சியாளர் ஸ்கலோனியுடன் நல்ல புரிதல் உள்ளது. அடுத்த உலக கோப்பை வரை இவரும் பதவியில் இருப்பாரா எனத் தெரியவில்லை. இப்படி பல விஷயங்கள் தான் மீண்டும் உலக கோப்பையில் பங்கேற்பதை தீர்மானிக்கும்,'' என்றார்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!