புதுடில்லி: ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனல் வரும் மார்ச் 18ல் நடக்கவுள்ளது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' ஐதராபாத், சென்னை, மும்பை, மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால், பெங்களூரு உள்ளிட்ட 11 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று பிப். 26ல் முடிகின்றன. இதுவரை மும்பை, ஐதராபாத் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் 'பிளே-ஆப்', அரையிறுதி, பைனல் உள்ளிட்ட 'நாக்-அவுட்' சுற்றுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
அடுத்த நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி 'பிளே-ஆப்' போட்டியில் விளையாடும். மார்ச் 3ல் நடக்கும் 'பிளே-ஆப்-1' போட்டியில், புள்ளிப்பட்டியலில் 4, 5வது இடம் பிடிக்கும் அணிகள் மோதும். மார்ச் 4ல் நடக்கும் 'பிளே-ஆப்-2' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 6வது இடம் பிடிக்கும் அணிகள் விளையாடும்.
'பிளே-ஆப்' சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இரண்டு கட்டமாக அரையிறுதி நடத்தப்படும். முதற்கட்ட போட்டிகள் மார்ச் 7 (முதலிடம், 'பிளே-ஆப்-1ல்' வெற்றி பெறும் அணி), 9ல் (இரண்டாவது இடம், 'பிளே-ஆப்-2ல் வெற்றி பெறும் அணி) நடக்கும்.
இரண்டாம் கட்ட போட்டிகள் மார்ச் 12 (முதலிடம், 'பிளே-ஆப்-1ல்' வெற்றி பெறும் அணி), 13ல் (இரண்டாவது இடம், 'பிளே-ஆப்-2ல் வெற்றி பெறும் அணி) நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 18ல் நடக்கவுள்ள பைனலில் விளையாடும். பைனலுக்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!