ஹில்லரோட்: டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' போட்டியில் இந்தியா, டென்மார்க் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டென்மார்க்கில், இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு குரூப்-1 பிளே-ஆப்' போட்டி' இன்று துவங்குகிறது.
இந்தியா சார்பில் யூகி பாம்ப்ரி, சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ரோகன் போபண்ணா ஆகியோர் பங்கேற்கின்றனர். இன்று நடக்கும் ஒற்றையர் பிரிவு போட்டியில் யூகி பாம்ப்ரி, சுமித் நாகல் களமிறங்கலாம். நாளை நடக்கவுள்ள இரட்டையர் பிரிவு போட்டியில் ரோகன் போபண்ணாவுடன், யூகி பாம்ப்ரி ஜோடி சேரலாம்.
டென்மார்க் அணியில் உலகின் 'நம்பர்-9' ஹோல்கர் ரூன் 19, இடம் பெற்றிருப்பது பலம். கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் 4வது சுற்று வரை சென்ற இவர், கடந்த ஆண்டு 3 ஏ.டி.பி., பட்டம் வென்றார்.
டேவிஸ் கோப்பை அரங்கில் இந்தியா, டென்மார்க் அணிகள் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 2 (1984, 2022), டென்மார்க் ஒரு முறை (1927) வெற்றி பெற்றன. கடந்த ஆண்டு டில்லியில் நடந்த போட்டியில் இந்திய அணி 4-0 என டென்மார்க் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி 'வேர்ல்டு குரூப்-1' சுற்றுக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!