Load Image
Advertisement

கோப்பை வென்றார் குன்னேஸ்வரன்

அல் ஜாக்ரா: ஐ.டி.எப்., டென்னிசில் 2018க்குப் பின் கோப்பை வென்றார் குன்னேஸ்வரன்.

குவைத்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இத்தொடரின் 'நம்பர்-4' வீரர் இந்தியாவின் குன்னேஸ்வரன் (தமிழகம்), உஸ்பெகிஸ்தானின் சல்டானோவை எதிர்கொண்டார். முதல் செட்டை குன்னேஸ்வரன் 6-2 என கைப்பற்றினார்.

இரண்டாவது செட் இழுபறியாக இருந்தது. இருவரும் 6-6 என சமநிலையை அடைய, இரண்டாவது செட் 'டை பிரேக்கருக்கு' சென்றது. கடைசியில் குன்னேஸ்வரன் 7-6 என கைப்பற்றினார். முடிவில் குன்னேஸ்வரன் 6-2, 7-6 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். 2018க்குப் பின் ஐ.டி.எப்., டென்னிசில் இவர் வென்ற முதல் கோப்பை இது.

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement